2016 ம் ஆண்டு தொடக்கம் இருந்து வந்த எதிர்பார்ப்புக்கு இப்போது பதில் வந்திருக்கிறது.ODD ல் திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டே உருவான திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை.எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் இசை மற்றும் பிஜிஎம்-க்கு நல்ல வரவேற்பு இருந்தது.அதேபோல்,ட்ரெய்லர் வெளியான போது எஸ்.ஜே.சூர்யாவின் வெறித்தனமான நடிப்பும் பாராட்டுகளை பெற்றிருந்தமையால் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருந்தது.
இந்த நிலையில் செல்வராகவனிடம் ரசிகர்கள் திரைப்படம் பற்றி கேட்டுக் கேட்டு புளித்துவிட்ட நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த முடிவு கிடைத்துள்ளது.திரையில் வெளிவெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இப்போது இதுவும் ஆறுதல் தான்.