கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் விமானப் பயணத்திற்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.முகக்கவசம் அணிவது,கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவது,தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது என பயணத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரு தம்பதி முழு விமானத்தையும் முன்பதிவு செய்து பயணித்த வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் முல்ஜாடி.இவரும் இவரது மனைவி ஷால்வின் சாங்கும் இந்தோனேசியாவில் இருந்து பாலிக்கு விமானம் மூலம் செல்ல முடிவெடுத்தனர்.ஆனால் தங்களது பயணத்தில் கொரோனா தொற்று ஏற்படுமோ என அச்சம் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தனியார் விமானத்தின் அனைத்து இருக்கைகளையும் முன்பதிவு செய்து விமானத்தில் வேறு யாரும் பயணிக்காததை உறுதிப்படுத்திக் கொண்டார்.அதன்மூலம் தானும் தனது மனைவியும் விமானத்தில் பயணித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
அதில் அவர் கொரோனா வைரஸால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்காக முழு விமானத்தையும் முன்பதிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக முழுவிமானத்தையும் பதிவு செய்து பயணம் செய்த தம்பதியினரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.