மாஸ்டர் படத்தில் முக்கிய வில்லன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. அண்மையில் படம் பற்றிய நினைவுகளை ஒரு பேட்டியின் போது பகிரந்திருந்த விஜய் சேதுபதி பல சுவாரசியமான விடயங்களைப் பகிரந்துள்ளார்.
அதிலே தன்னிடம் தன் தாய், தான் விஜயைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கேட்டதாகவும், தனக்கு அது பெரிய ஆச்சரியமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
பின்பு மாஸ்டர் படதிற்கான படப்பிடிப்பின் போது தனது அம்மாவை கூட்டிச்சென்று விஜய் அவர்களைக் காட்டிய போது என்னுடைய மகன் நன்றாக நடிக்கிறானா? உங்களுக்கு நன்றாக ஒத்துழைப்பு வழங்குகிறானா? என்றும் கேட்டுள்ளார்.
அதற்கு விஜய் அவருடைய மனம் சந்தோஷப்படும் அளவுக்கு பதில் சொல்லியுள்ளார். இதனைக் குறிப்பிட்டுப் பேசிய விஜய் சேதுபதி நன்றி விஜய் Sir என்று தன் நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் வில்லத்தனமான முகம் வெளிப்படும் என்று படக்குழு பெரிதாக நம்பியிருக்கும் நிலையில் தானும் மாஸ்டர் படத்தில் மனம் விரும்பி வேலை செய்துள்ளதாகவும், படத்தை பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்