தனுஷின் நடிப்பிலும் வெற்றி மாறன் இயக்கத்திலும் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தான் அசுரன்.
தற்போது சிம்பு நடித்து சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கலுக்கு திரையில் வெளியாக காத்திருக்கும் படம் தான் ஈஸ்வரன். இந்தப் படத்தின் Trailor தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்தப் படத்தின் காட்சியொன்றில் சிம்பு பேசும் வசனம் வேண்டுமென்றே தனுஷை சீண்டிப்பார்ப்பது போல் இருப்பதாக இணையவாசிகள் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அப்படி சிம்பு என்ன பேசியிருக்கிறார் என்றால், நீ அழிக்க வந்த அசுரன் என்றால் நான் காக்கவந்த ஈஸ்வரன்டா என்று வில்லனைப் பார்த்து பேசுகிறார். தனுஷ் நடிப்பில் வெற்றிபெற்ற அசுரன் படம் மூலம் இன்னும் நடிப்பில் உயரம் தொட்ட தனுஷை வேண்டுமென்றே குறிப்பிடுவது போல் அது இருப்பதாகத் தான் பலரும் பேசிக்கொள்கின்றனர்.
படத்தின் விளம்பரத்திற்காக அந்த வசனத்தை வேண்டுமென்றே Trailor இல் இடம்பெறச் செய்திருக்கிறார்கள் என்றும், ஒரு தரப்பினர் பேசிக் கொள்கிறார்கள்.
கிராமத்துப் பின்னணியைக் கொண்டு உருவாகியுள்ள ஈஸ்வரன் படம், சிம்பு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.