தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’, சிம்புவின் 'ஈஸ்வரன்' ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில்,கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய தனுஷின் 40-வது படமான 'ஜகமே தந்திரம்' வெளியீடு குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் ஏற்கனவே 2020 மே 1-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது.ஆனால் கொரோனா சூழ்நிலை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் 'ஜகமே தந்திரம்’ படத்தை தயாரித்துள்ளது.படத்தில் தனுஷ் ஒரு மதுரை கேங்க்ஸ்டராக நடிக்கிறார்.வில்லனாக பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் ஜேம்ஸ் கொஸ்மோ,இந்தப் படத்தின் மூலம் இந்திய திரையுலகில் அறிமுகமாகிறார்.
இந்த படம் இணையத்தில் வெளியிடப்படும் என்று பரவிய செய்தியை ஏற்கனவே தயாரிப்பாளர் சசிகாந்த் மறுத்திருந்தார். இந்த நிலையில் காதலர் தின சிறப்பு திரைப்படமாக வெளியாகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.