தளபதியின் மாஸ்டர் படம் பெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என வேண்டி படக்குழு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் வழபாடு நடத்தியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி கலக்கும்,'மாஸ்டர்' தைப்பொங்கலுக்கு வெளியாக இருக்கு நிலையில் படக்குழு அண்மைய நாட்களில் பல promo போட்டோக்களை வெளியிட்டும் வருகிறது.
அண்மையில் வெளியான Promo வில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி பேசிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டுள்ளன.இந்நிலையில் தற்போது மாஸ்டர் படம் வெற்றியடைய வேண்டும் என வேண்டி மாஸ்டர் படக்குழு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்றிருக்கிறது.
இது தொடர்பான புகைப்படத்தை மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் அவர்களது Twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.குறித்த புகைப்படத்தில் மாஸ்டர் திரைப்பட இசையமைப்பாளர் அனிருத்,இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னா,விஜயின் மேலாளர் ஜெகதீஷ்,நடிகர் அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.