தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலுக்குள் நுழையப்போவதில்லை என தெரிவித்து ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்குள் வராதமை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அவரது ரசிகர்கள் பலர், வலியுறுத்தி வருகின்றார்கள்.
இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்ற இயக்கத்தின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட சிலர், மேலும் சில ரஜினி ரசிகர்களுடன் இணைந்து சென்னையில் வைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், தான் அரசியலில் பயணிக்க போவதில்லை என்றும், இது போன்ற நிகழ்வுகளை நடத்தி, மேலும் மேலும் தன்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும், அறிக்கை ஒன்றை வெளியிட்டு உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.