அமெரிக்காவிலுள்ள விலங்குகள் பூங்கா ஒன்றில் உள்ள இரண்டு கொரில்லா குரங்குகளுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, செய்திகள் வெளிவந்துள்ளன.
உலக நாடுகளில் தற்போது அமெரிக்காவிலேயே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் நாளாந்தம் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகி வரும் நிலையில், தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த விலங்குகள் பூங்காவில், 2 கொரில்லாக்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருமல் மற்றும் மிதமான காய்ச்சல் என்பன ஏற்பட்டுள்ளன.
இதனால் பூங்கா அதிகாரிகள் அந்த கொரில்லாக்களின் மலக்கழிவைக் கொண்டு பரிசோதனை செய்துள்ளனர்.
இதன்போதே, குறித்த இரண்டு கொரொல்லாக்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து தற்போது குறித்த இரண்டு கொரில்லாக்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.