Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
'நீ லெஜெண்ட் மச்சி ' அஷ்வினுக்கு பிரபல நடிகர் பாராட்டு!

sooriyan fm Gossip - 'நீ லெஜெண்ட் மச்சி ' அஷ்வினுக்கு பிரபல நடிகர் பாராட்டு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

195 Views
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இறுதி  நாளில் அசத்திய இந்திய வீரர் அஷ்வினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதில் பிரபல நடிகர் சித்தார்த் tweeter இல் வாழ்த்து சொல்லியுள்ளார் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருந்தது. இதையடுத்து சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியும் வெற்றி தோல்வியின்றி நிறைவடந்தது.இந்தப் போட்டியின் இறுதி நாளில் இந்திய வீரர்களின் ஆட்டம் எல்லோர் மத்தியிலும் பிரம்மிப்பை ஏற்படுத்தியது.

4-வது இன்னிங்சில் இந்திய அணி கிட்டத்தட்ட 130 ஓவர்கள் தாக்குப்பிடித்து தோல்வியில் இருந்து தப்பியது.குறிப்பாக 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின்-ஹனுமா விஹாரி 256 பந்துகளை எதிர்கொண்டு ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடுத்தனர்.இந்திய அணியின் 3வது டெஸ்ட் போட்டி,கிரிக்கெட் ரசிகர்கள்,திரைப் பிரபலங்கள் பலரையும் ஆச்சர்யப்படுதியது எனலாம்.

குறிப்பாக அஸ்வின் - விஹாரிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.அதே போன்று நடிகர் சித்தார்த் அஸ்வினை பாராட்டி தன்னுடைய சமூக வலைத்தள பதிவில் : “நீ ஒரு லெஜண்ட் அஸ்வின்.என்ன ஒரு தரமான அணுகுமுறை.என்னை பொறுத்தவரை நீ தான் ஆட்டநாயகன்.லெஜண்ட் மச்சி நீ” என கூறியுள்ளார்.அதையடுத்து நடிகர் சித்தார்த் இட்ட பதிவிற்கு அஸ்வின் நன்றி மச்சி என பதிலளித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top