தனது நடிப்பு நன்றாக இல்லை எனக் குறிப்பிட்ட ரசிகரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் நடிகர் மாதவன்.
திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் மாதவன்,ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் மாறா திரைப்படம் சில தினங்களுக்கு முன்னர் அமேசான் பிரைமில் வெளியாகியது.கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மார்ட்டின் ப்ரக்காட்டின் இயக்கத்தில் வெளியாகிய படம் சார்லி. அதன் தமிழ் ரீமேக் தான் ‘மாறா’.
இந்தப் படம் தமிழில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.இந்நிலையில் ரசிகர் ஒருவர்,”ஏற்கனவே சார்லியைப் பார்த்தவர்களுக்கு,சராசரிக்கும் குறைவான படம்.முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு இந்த திரைப்படத்தைப் பார்ப்பது வேதனை.
சீரியஸாக மேடி இந்த படத்தை கெடுத்து விட்டார்.அத்தகைய சோகமான மற்றும் மனச்சோர்வடைந்த கதாபாத்திரம்”என ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.இதற்கு பதிலளித்த மாதவன்,“அச்சச்சோ.உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும் சகோ.அடுத்த முறை முயற்சி செய்து சிறப்பாகச் செய்வேன்”என இருகரம் கூப்பும் எமோஜியை பதிவிட்டிருக்கிறார்.மாதவனின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.