தமிழ் Big Boss இப்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நேரம் வீட்டிலிருந்து போட்டியாளர்கள் வெற்றிக்காக போராடும் வேளை வெளியிலிருந்து அவர்களின் ரசிகர்களும் உழைத்து வருகிறார்கள். BigBoss - 4ல் யார் வெற்றியாளர் என்பதுதான் இப்போது பலரது கேள்வியாகவுள்ளது.இந்த போட்டியில் வெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் தக்கவைத்திருப்பவர் நடிகர் ஆரி என்றும் சொல்லலாம்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல கோடி ரசிகர்களை தன் பக்கம் எடுத்துக்கொண்ட ஒருவராக மாறியிருக்குறார் ஆரி.
போட்டியாளர்களின் வெற்றிக்காக இசை தொகுப்புக்களும் வெளியிடப்படுகிறது.அதில் அதிகளவு ஆரி சிறப்பு இசையாகவே வெளியாகிறது.இந்தநிலையில் நட்பு அடிப்படையில் ஆரிக்காக ‘ஆரி வேற மாறி’ என்ற லிரிக்கல் இசை தொகுப்புக்கு இசை அமைத்துள்ளார் சி.சத்யா.
‘ஆரி வேற மாறி’ சிங்கிள் டிராக் இன்று வெளியாகி உள்ளது.இதேவேளை நடிகர் ஆரி ஏற்கனவே சி.சத்யா இசையமைத்த ‘நெடுஞ்சாலை’ ‘உன்னோடு கா’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.தற்போது இந்த கூட்டணி ‘அலேகா’ படத்திலும் இணைந்துள்ளது.அந்த நட்பின் அடிப்படையிலும் ஆரியை இன்னும் பிரபலபடுத்த இசையமைப்பாளர் சத்யா முயன்றிருக்கிறார்.