ஈஸ்வரன் படத்திற்காக சிம்பு உடல் மெலிந்து முழுமையான மாறுதலுடன் நடித்துள்ளார்.ஒரு முழுமையான கிராமத்து கதையாக வந்திருக்கும் 'ஈஸ்வரன்' தன்னுடைய வாழ்க்கையின் உண்மை அனுபவம் தான் எனவும் தெரிவித்துள்ளர்.படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன் மேலும் கூறும்போது,ஈஸ்வரன் படத்தின் முதல் பொறி என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பால் உருவானதுதான்.
ஒரு முறை,ஜோதிடர் ஒருவர் எங்கள் குடும்பத்தில் ஒரு எண்ணிக்கை குறையும் என்று கூறிய சம்பவத்தின் தாக்கம்.அதனால் என் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்கள்.அது கதையாக என்னுள் ஈஸ்வரனாக உருவானது என்றும் கூறியுள்ளார்.தளபதி விஜய் நடித்த மாஸ்டர் வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்புடன் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வரும் நிலையில் சிம்புவின் 'ஈஸ்வரன்' திரைப்படம் மீதும் இப்போது அதிக பார்வை திரும்பியுள்ளது.