உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் இன்று தைத்திருநாளைக் கொண்டாடுகின்றனர்.
வருடத்தின் முதலாவது அறுவடை மூலம் கிடைக்கப்பெற்ற அரிசியை பொங்கி, சூரிய பகவானுக்கு படைப்பதே இன்றைய நிகழ்வின் முக்கிய அம்சமாகும்.
மனித குலத்தின் மாண்பைப் போற்றும் வகையில் இன்றைய தைத்திருநாள் கொண்டாடப்படுகின்றது.
அறுவடை முடிந்து பெற்ற அரசிக்கு மேலதிகமாக கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு) போன்றவையும் படையலாக சூரிய பகவானுக்கு வைக்கப்படும்.
இன்றைய தினத்தில் தைத்திருநாளைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள் .