Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
15
விஜய் சேதுபதியின் படம் சர்ச்சையில் சிக்கியது

Sooriyan Gossip - விஜய் சேதுபதியின் படம் சர்ச்சையில் சிக்கியதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

769 Views
இளைஞர்களின் மனதில் வெகுவாக இடம்பிடித்துள்ள விஜய் சேதுபதியின் Master திரைப்படம் கடந்த புதன்கிழமை வெளியாகியிருந்தது. 

இந்த திரைப்படத்தில் வில்லன் பாத்திரத்தை ஏற்று நடித்த விஜய் சேதுபதிக்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன், பிரபல நடிகர் பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா உள்ளிட்டவர்களும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் உள்ள பல காட்சிகள், சீமானை கேலி செய்வது போல் உள்ளதாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் ''நாம் தமிழர் கட்சியினர்'' துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள நடிகர் பார்த்திபன், “நண்பர் சீமானிடம் நேரடியாக துக்ளக் தர்பார் படம் குறித்து விளக்கமளித்து விட்டேன். அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார். ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டுமென்று வைக்கப்பட்டதல்ல. அப்படி இருந்திருந்தால், அதற்கு நானே இடமளித்திருக்க மாட்டேன். இந்த நிமிடம் வரை நான் எந்த கட்சியையும் சார்ந்தவனல்ல. இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும் நாம் தமிழர் தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய ஒருபோதும் இடம் தரமாட்டேன்'' என்று கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top