பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் புத்தாண்டில் முதலாவதாக வெளிவந்து திரையில் காண்பிக்கப்படும் "மாஸ்டர்" திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பைக் கொடுத்து 'தளபதி' ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில்,2வது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் வசூல் விபரங்கள் மெல்ல மெல்ல வெளியாகிக்கொண்டிருக்கின்றன.தமிழ்நாடு-சென்னையில் மட்டும் "மாஸ்டர்" திரைப்படம் வெளியான முதலாவது நாளில் இந்திய நாணய மதிப்பில் 1கோடி 21லட்சம் ரூபாவும்,நேற்றைய 2ம் நாளில் 1கோடி 5லட்சம் ரூபாவுமாக மொத்தம் 2கோடி 26லட்சம் ரூபாவை வாரிக்குவித்துள்ளது.
ஒட்டுமொத்த திரையரங்குகளை இணைத்த வசூல் கணக்கிடப்படுகையில்,தமிழ்நாட்டில் மட்டும் 43கோடி இந்திய ரூபாவை கொண்டுவந்து சேர்த்துள்ளது "மாஸ்டர்."அத்துடன்,கேரளா,ஆந்திரா என பல மாநிலங்களும் வெவ்வேறு மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் வசூல் விபரங்கள் இன்னும் சரியாக வந்து சேர்ந்திராத நிலையிலும்,தெலுங்கில் முதல்நாள் வருமானம் அண்ணளவாக 6கோடி இந்திய ரூபா என்று அறியக்கிடைத்துள்ளது.
இது இப்படியிருக்க,உலகளவில் பெரும் எதிர்பார்ப்புடன் கூடியதாக இந்தத் திரைப்படம் வெளியானமை மூலம் 2 நாட்களில் மட்டும் 80 கோடி இந்திய ரூபாவை கல்லா கட்டியிருக்கின்றது என "மாஸ்டர்" தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.அத்துடன்,நாளை மற்றும் மறுநாள் வார இறுதிநாட்கள் என்பதால் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் 100கோடி வசூல் சாதனை பதிவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது படக்குழு.