வெற்றி மாறன் இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் படத்தின் நாயகனாக சூரி நடித்துக் கொண்டிருக்கிறார்.
இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் கதையின் நாயகியாக யார் நடிக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன.
இப்போது பிரபலமான இசையமைப்பாளர் G.V பிரகாஷ்குமாரின் தங்கையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் அவர் தான் கதையின் நாயகியாக நடிக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே க.பெ ரணசிங்கம் படத்தில் விஜய்சேதுபதியின் தங்கையாக இவர் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கள் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. G.V இன் தங்கை பவானி ஶ்ரீ இந்தப்படத்தில் நடித்து இவரது திறமையை வெளிப்படுத்தினால் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்துக்கு வரலாம் என்றும் பலரும் பேசிக் கொள்கிறார்கள்.