ரசிகர்களோடு இணைந்து தமிழ்நாடு - திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கில் "மாஸ்டர்" திரைப்படத்தை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், படம் தொடர்பில் ரசிகர்களின் விமர்சனங்கள் எவ்வாறு உள்ளன என்பதையும் நேரில் அறிந்துகொண்டார்.
அதன் பின்னர் ஊடகத்துறையினரை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,"மாஸ்டர்" படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளமை தொடர்பிலும் கேள்வி எழுந்தது.இதற்குப் பதிலளித்த அவர், "விமர்சனம் என்பது பாசிட்டிவாகத் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை,நெகட்டிவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தப் படத்தின் நீளம் தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றது.உண்மைதான்,இரண்டு பெரிய ஹீரோவைக் காட்ட வேண்டும் என்பதாலேயே மாஸ்டர் படம் நீளமாக உள்ளது.“படைப்பாளிகள் என்று வரும்போது ரசிகர்களது விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் அதை நாம் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வரவிருக்கும் எனது அடுத்த படத்தில் இப்படியான விமர்சனங்கள் எழாதவாறு அக்கறை செலுத்துவேன்.எது எப்படியிருப்பினும் இந்தப் படம் மக்களுக்கு பிடித்திருப்பதால்தான் இந்த நெருக்கடியான வேளையிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து செல்கின்றனர்"எனக்கூறி ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.