உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் குறித்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில், சைவ உணவுகளை அதிகமாக உண்பவர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்புக்கள் குறைவாக இருக்கும் என, கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக சுமார் 40 நிறுவனங்களில் பணியாற்றும் 10 ஆயிரத்து 427 பணியாளர்கள், மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தன்னார்வ பங்கேற்பின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த ஆய்வின் முடிவில், சைவ உணவு உண்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
A மற்றும் O ரத்த பிரிவினருக்கும் கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
B மற்றும் AB பிரிவு ரத்தம் கொண்டவர்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.