இரண்டு இரும்புக் கால எலும்புக் கூடுகள் இங்கிலாந்தில் லிங்கன்ஷயரில் நடந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.இந்த எலும்புக் கூடுகள், நேவன்பை என்னும் இடத்துக்கருகில் தனித் தனி அகழ்வாய்வுப் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டன.
ஒரு தண்ணீர் குழாய்த் திட்டத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளின் போது இந்த எலும்புக் கூடுகள் கிடைத்தன.
இதனோடு சிறு கட்டடங்கள் மற்றும் பானைகளின் உடைந்த பாகங்களும் கிடைத்திருக்கின்றன.
இந்த கண்டுபிடிப்புகள் இந்த பகுதியின் கடந்த காலத்தைக் குறித்து, அகழ்வாய்வாளர்களுக்கு இன்னும் நிறைய தெரிந்து கொள்ள உதவும் என ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.