உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பலகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உலகளவில் 9 கோடியே 59 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக அமெரிக்காவில் 2,46,15,096 பேருக்கும், இந்தியாவில் - 1,05,71,733 பேருக்கும், பிரேசிலில் 85,11,770 பேருக்கும்
ரஷ்யாவில் 35,91,066 பேருக்கும், இங்கிலாந்தில் 34,33,494 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இவ்வாறு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில், 2 கோடியே 53 லட்சத்து 75 ஆயிரத்து 242 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சுமார் 1 லட்சத்து 11 ஆயிரத்து 844 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து 6 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.