சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய 4 ஆண்டு சிறை தண்டனை எதிர்வரும் 27 ஆம் திகதி நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் பெங்களூரில் உள்ள சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கடந்த இரு நாட்களாக மிதமான காய்ச்சல், இருமல் என்பன இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று காலை திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவர்கள் சசிகலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர். அதன்பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரது உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் வைத்து மீண்டும் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.