பிக் பாஸ் வெற்றியாளரான நடிகர் ஆரி, அடுத்ததாக நடிக்கும் படத்தை அபின் ஹரிஹரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இதில் ஆரி முதன்முறையாக காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் ஆரிக்கு வில்லனாக மலையாள நடிகர் சரத்குமார் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ் எனும் படத்தில் நடித்து புகழ் பெற்றதால் இவரை அப்பாணி சரத் என்றே அழைக்கின்றனர்.
இவர், தமிழில் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம், மற்றும் சண்டக்கோழி-2 போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து வெப் சீரிஸில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.