இந்தியாவிலிருந்து 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள், 9 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில், ‘'சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரித்தல்'' குறித்த அமர்வு நேற்று இடம்பெற்றது. உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு, முன்னணி நாடுகள் ஒன்றிணைந்து உதவும் வகையிலான பல யோசனைகள், இந்த அமர்வின் போது, முன்வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஐ.நா.வுக்கான இந்திய துணை நிரந்தரப் பிரதிநிதி கே.நாகராஜ் உலகளவில், 9 நாடுகளுக்கு சுமார் 60 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தடுப்பூசியின் அடுத்த கட்டமாக, மேலும் பல நாடுகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என, அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், இந்த தடுப்பூசி கட்டாயமாக பலனளிக்கும் என, அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.