அஜித் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். பொதுவாக சமூக வலைத்தளங்களில் தலை காட்டாத அஜித் அவரின் பிரத்தியேக படங்கள் வெளியானால் ட்ரெண்ட் ஆவதுண்டு.
இந்நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகன் ஆத்விக்குடன் சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆத்விக்கின் கியூட்டான புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து வரும் அஜித் ரசிகர்கள், குட்டி தல என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.