அஜித் நடித்த ’காதல் கோட்டை’ விஜய் நடித்த ’நினைத்தேன் வந்தாய்’ மற்றும் ‘ப்ரெண்ட்ஸ்’,கமல்ஹாசன் நடித்த ’தெனாலி’ விஜயகாந்த் நடித்த ’வல்லரசு’ உள்பட பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை தேவயானி.
திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் அவர் பிரபலமாக இருந்தார் என்பதும் அவர் நடித்த ’கோலங்கள்’ என்ற தொலைக்காட்சி தொடர் 6 வருடமாக மக்கள் மத்தியில் வரவேற்புடன் ஒளிபரப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.மகள்களின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் தேவயானி தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் தேவயானி மகள் அவரை போலவே இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்து,தேவயானிக்கு இவ்வளவு பெரிய மகளா?என கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.