எலுமிச்சை மிளகு டீ மூட்டு வலிகளைக் குறைப்பதற்கு சிறந்தது என்று கூறப்படுகிறது.
எந்தவொரு நோய்க்கும் எதிராகப் போராட உகந்தது.
நல்ல ஆரோக்கியத்திற்காக மூலிகைத் தேநீர் பெரிதும் பயனளிக்கிறது . இஞ்சி, துளசி, புதினா, மிளகு மற்றும் இலவங்கப்பட்டை மிகவும் ஆரோக்கியமானவை.
எந்தவொரு நோய்க்கும் எதிராகப் போராட உகந்தவை. இது மூட்டு வலிகளைக் குறைப்பதற்கு சிறந்தது என்றும் கூறப்படுகிறது.
எலுமிச்சை சாறு - 1 பழத்தினுடையது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
தேன் - 1 1/2 தேக்கரண்டி
செய்முறை:
2 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மிளகு மற்றும் மஞ்சள் தூளை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
பின்னர் அதை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் விட்டு குடிக்கலாம்.