இது இரண்டாம் பாக சீசன் போல...
பில்லா -2, அமைதிப்படை-2, சிங்கம்-2 (பாகம் 3உம் வருமோ?) ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 ஆகிய படங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடித்த பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தையும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
அப்படம் சம்பந்தமாக, கதை தயார் செய்துவிட்ட அவர், ரஜினியை ஏற்கனவே சந்தித்ததாகவும், இப்போதைக்கு வேண்டாம் என்று அவர் சொன்னதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது கமல்,அஜித், சத்யராஜ், சூர்யா,அர்ஜூன் போன்ற நடிகர்களெல்லாம் ஏற்கனவே ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதால் ரஜினியும் நடிப்பார் என்ற நம்பிக்கையில், கோச்சடையானை அடுத்து ரஜினியை சந்தித்து பாட்ஷா-2 கதையை சொல்ல முடிவெடுத்திருந்தாராம் சுரேஷ்கிருஷ்ணா.
ஆனால், இந்த செய்தி ரஜினியின் காதுகளை எட்டியபோது, பாட்ஷா-2வில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டாராம். 18 ஆண்டுகளுக்கு முந்தைய படத்தில் அதே வேகத்துடன் இப்போது நடிக்க முடியாது. அதோடு, இப்போதைய தன் உடல் நிலையம் மாறி விட்டது. அதனால் இனி அந்த படத்தின் தொடர்ச்சியில் நடிப்பது சாத்தியப்படாது என்று கூறி விட்டாராம். அதனால், பாட்ஷா-2 முயற்சியை விட்டு விட்டாராம் சுரேஷ்கிருஷ்ணா.