வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் படம் என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து கொண்டிருக்கிறது.
இவர் நடித்து வெளிவர இருக்கும் படமான ரஜனி முருகன் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்கினார்கள்.
பாடல்களும் வெளியாகி சூரியனின் தங்கத் தேன்மழையில் முன்னிலை பெறும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரு வரவேற்பையும் பெற்றுள்ளன.
இந்நிலையில் செப்டம்பர் 17 ஆம் திகதி வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அந்த படம் செப்டம்பர் 17 இல் வராதாம், மாறாக ஒக்டொபர் 21 இல் தான் வெளிவரும் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.