"கத்தி" வசூலில் சாதனை.
kaththi-box-office-1stday - "கத்தி" வசூலில் சாதனை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
"கத்தி" வசூலில் சாதனை.A.R.முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி
விஜய் நடித்த "கத்தி" திரைப்படம் சர்சைகளுக்கு மத்தியில் உலகளாவிய ரீதியில் நேற்றைய தீபாவளி தினத்தில் வெளியிடப்பட்டது.
பலத்த நெருக்கடிக்கு மத்தியில் படம் வெளியாவதில் சந்தேகங்களை தோற்றுவித்தாலும் அத்தனை சங்கடங்களையும் நேற்றைய முதல் நாள் வசூல் துடைத்தெறிந்திருக்கிறது எனலாம்.
தமிழகத்தில் மட்டும் நேற்றைய முதல் நாளில் 12.5 கோடிக்கு வசூல் கிடைத்திருக்கிறது.
கேரளாவில் 1.75 கோடியும் கர்னாடகாவில் 1.6 கோடியுமாக மொத்தமாக இந்த 3 இடங்களிலும் சேர்த்து 15.85 கோடி வசூல் ஆரம்ப நாளில் ஈட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விஜய் + A.Rமுருகதாஸ் கழுத்து வரை போன இந்த "கத்தி" இப்போது அதுவே மாலையாகி மகுடம் சேர்த்திருக்கிறது இந்த வெற்றிக் கூட்டணிக்கு. .
ஏற்கனவே A.Rமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படமும் பெரு வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.