Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
உயர்தர பரீட்சையின் அகில இலங்கை பெறுபேறுகள்

#sooriyanfm #news - உயர்தர பரீட்சையின் அகில இலங்கை பெறுபேறுகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,586 Views
இன்று வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின்படி, கணிதப் பாடப் பிரிவில் கொழும்பு ரோயல் கல்லூரியின் தசுன் ஓசத ஜயசிங்க அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப்  பெற்றுள்ளதுடன், இரண்டாம் இடத்தை குருணாகலை மலியதேவி வித்தியாலயத்தின் தனன்ஜய குமார திஸாநாயக்க பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை இரத்தினபுரி சீவிலி மத்திய கல்லூரியின் சசின் நில்மன்த பெற்றுள்ளார்.
முதலிடத்தை பெற்ற தசுன் ஓசத ஜயசிங்க  2012ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையிலும் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியான முதலாம் இடத்தை, குருணாகலை மலியதேவி மகளிர் வித்தியாலயத்தின் ஜீவா நயனமாலி பெற்றுள்ளதுடன் , இரண்டாம் இடத்தை கண்டி புஸ்பதான மகளிர் வித்தியாலயத்தின் நிராஷா நதீஷானி குலரத்ன பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை கொழும்பு 7 சீ.எம்.எஸ் .மகளிர் வித்தியாலயத்தின் பாதிமா அமீரா ஸ்மயில் பெற்றுள்ளார்.

அத்துடன் விஞ்ஞான பிரிவின் முதலாம் இடம் கம்பஹா ரத்நாவலி மகளிர் வித்தியலயத்தின் மாணவி தேபுலி உமேஷா கருணாவல்லப பெற்றுள்ளார்.

இதே வேளை வர்த்தக பிரிவில் குருணாகலை மலியதேவி ஆண்கள் பாடசாலையின் எப்.எம். அகில் மொஹமட் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

உயிரியல் பிரிவின் இரண்டாம் இடம் புத்தளம் ஜனாதிபதி வித்தியாலயத்தின் மாணவர் ஜே.எம். மொஹமட் முனிஷுக்கு கிடைத்துள்ளது.

பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தை மாத்தளை புனித தோமாவின் கல்லூரியின் மாணவர் அனுராத சமரகோன் பெற்றுள்ளதுடன், இரண்டாம் இடத்தை கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் இசார புத்திக பத்மசிறி பெற்றுள்ளார்.

இதில் மூன்றாம் இடத்தை யாழ்ப்பாணம் ஹிந்து கல்லூரியின் மாணவரான பாலசுப்ரமணியம் ஞானகீதன் பெற்றுள்ளார்.

விஞ்ஞான தொழில்நுட்ப பிரிவில் முதலாம் இடத்தை பண்டாரவளை தர்மபால மகா வித்தியாலயத்தின் மாணவர் வாசனா நவோதினி மாரசிங்க பெற்றுள்ளதுடன், இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் வித்தியாலயத்தின் கருணைநாயகம் ரவிஹரன் பெற்றுள்ளார்.

இதற்கிடையில், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி, ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவி சந்தரன் சஜிதா விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

அதேநரம், பொறியியல் தொழில் நுட்ப பிரிவில், ஹட்டன் - நோர்வூட் தமிழ் மாகா வித்தியாலயத்தின் மாணவர் ராதா கோகுல்நாதன், நுவரெலியா மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள கீழுள்ள இணைய முகவரிக்கு செல்லவும்.

http://www.doenets.lk/result/alexamresult.jsf


பெறுபேறுகள் தொடர்பாக கீழுள்ள இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  

1911
011 27 84 208 
011 27 84 537 
011 314 0 314 
011 3 188 350

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top