Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
பாரிய பேரணி , புதிய தேசிய கொடி , பொலிஸ் உத்தரவை மீறி பட்டாசு: எங்கு போய் முடியப்போகிறது ‘சிங்க-லே’ ? (காணொளி)

Sinha-Ley campaign - பாரிய பேரணி , புதிய தேசிய கொடி , பொலிஸ் உத்தரவை மீறி பட்டாசு: எங்கு போய் முடியப்போகிறது ‘சிங்க-லே’ ? (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,841 Views
பொருளாதார வீழ்ச்சி , அதிகரித்துவரும் சிறுவர் மீதான வன்முறைகள், வீதி விபத்துக்கள் என பல்வேறு பிரச்சினைகள் இலங்கைக்கு பெரும் சவாலாக திகழ்ந்து வருகின்றன.

எனினும் ஒரு பக்கத்தில் இவை அனைத்தை விடவும் ஒப்பீட்டளவில் பெரிய, இனவாத த்தை தூண்டும் ‘சிங்க-லே’ என்ற இனவாத பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஒரு சிலரால் சிறிதாக சமூகவலைதளங்கள் ஊடாகவும் , ஸ்டிக்கர் மற்றும் இலட்சினை பொறிக்கப்பட்ட டீ-சேர்ட் என முன்னெடுக்கப்பட்டு வந்தது இப்பிரச்சாரம். இதற்கு ஆதரவாக வெளிநாடுகளில் வாழும் பெரும்பான்மை இனத்தவர்கள், பேஸ்புக் ஊடாக தமது ஆதரவை தெரிவித்து காணொளிகளை பரவ விடுவதனையும் காணக்கூடியதாக உள்ளது.

ஆரம்பத்தில் இதனை பெரிதாக எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு வந்தபோதிலும் இப்பிரச்சாரம் சிறிது சிறிதாக வேர் ஊன்றி வருவதை காணக்கிடைக்கின்றது. கடந்த ஆட்சியின் போது எட்டத் தவறவிடப்பட்ட இலக்குகளான நல்லிணக்கம், பொருளாதார சுபீட்சம் என்பவற்றை முன்னிலைப்படுத்தி தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியது.

உண்மையான நிம்மதியை எதிர்ப்பார்த்திருந்த சிறுபான்மையினரை மேலும் காயப்படுத்தும் மற்றும் பிரித்தாழும் வகையில் அமைந்துள்ளது ‘சிங்க-லே’ பிரச்சாரம். ‘சிங்க-லே’ என்பது இன ஆதரவு பிரச்சாரமா? அல்லது அரசியல் வியாபாரமா? என்பது ஒரு புறமிருக்க அதன் செயற்பாடுகள் இன ங்களுக்கிடையிலான விரிசலை மேலும் பெரிது படுத்துவதாக அமைந்து வருகின்றது.

இந்நிலையில் 'தெயட பன தெமு சிங்க-லே' என்ற பெயரில் உறுதிமொழி பெற்று கொள்வதற்காக சிங்க-லே தேசிய அணியினர், கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு சென்றிருந்தனர்.

இதன் போது காவல் துறையினருக்கும் குறித்த அணியினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் இருந்து குறித்த அணியினர், தமது விஷேட வாகன பேரணியை ஆரம்பித்தனர்.

இதன் போது பேரணி வாகனங்கள் மற்றும் அதன் போது வந்த தரப்பினரிடம் பௌத்த கொடிகள் இருந்தன. இதன் போது கடந்த காலங்களில் பேசப்பட்ட சிறுபான்மையரின் சின்னம் இல்லாத தேசிய கொடிகளை எடுத்து சென்றுள்ளனர்.

கொழும்பில் இருந்து வந்த பேரணி முற்பகல் 2.00 மணியளவில் மவனெல்ல நகருக்கு அருகில் வந்த போது, அங்கு பட்டாசுகளை வெடித்து மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று காவல் துறையினர் ஆலோசனை வழங்கினர்.

இதன் போது மானெல்ல காவல் துறையினருக்கும் பேரணியில் வந்தவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

பின்னர் பேரணி, கண்டி ஸ்ரீதலதா மாளிகை அருகில் வந்த போது, தேசிய கொடியல்லாத கொடிகளை தலதா மாளிகைக்கு எடுத்து செல்ல அனுமதிக்க முடியாது என காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இதன் போது மீண்டும் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டதுடன், பிக்குமார்களுக்கு மட்டும் உள்ளே செல்ல அனுமதியளிக்கப்பட்டது. பின்னர் குறித்த அணியினர், உறுதிமொழியினை பெற்றுகொண்டனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top