12 வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் 118 தங்கப் பதக்கங்கள், 63 வெள்ளிப் பதக்கங்கள், 17 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதேவேளை, இரண்டாம் இடத்தில் உள்ள இலங்கை, 24 தங்கப் பதக்கங்கள், 46 வெள்ளிப் பதக்கங்கள், 63 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.
பதக்க பட்டியிலில் மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.
அந்த நாடு 7 தங்கம், 20 வெள்ளி, 33 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் இடம் பெற்ற விஷேடமானது, நீச்சல் வீரர் மெதிவ் அபேசிங்க முழு போட்டிகளில் 7 தங்கங்களை பெற்றதன் காரணமாக 1991 ஆம் ஆண்டு தெற்காசிய போட்டிகளில் இலங்கை சார்பாக ஆறு தங்கப் பதக்கங்களை பெற்ற ஜூலியன் போலிங்கின் சாதனையை முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.