காலத்துக்கு காலம் ஒரு துறையில் இருப்பவர்கள், இன்னொரு துறைக்குள் புகுந்து கலக்க ஆசைப்பட்டு இறங்குவார்கள். சிலர் வெற்றி பெறுவார்கள், பலர் இருந்ததையும் இழந்துவிட்டு வெறுங்கையோடு திரும்புவார்கள். இதில் விஜய் யேசுதாஸ் எந்த ரகமென்று தெரியாது.
ஆனாலும், நடிகராக தமிழில் களமிறங்குகிறார் பாடகர் விஜய் யேசுதாஸ்.
ஏற்கனவே, மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்திருக்கும் விஜய், இப்பொழுது நட்புக்காக தமிழில் நடிகராகியிருக்கிறார்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் மாரி.
இதில் நடிகராகவே நடிக்கிறார் பாடகர் விஜய் யேசுதாஸ்.
ஏற்கனவே, தனுஷும் விஜயும் நல்ல நண்பர்கள் என்பதால், தனுஷ் கேட்டுகொண்டதற்கு இணங்க நடிக்க சம்மதித்துள்ளார் விஜய். இதில் அவருக்கு முக்கியமான வேடம் வழங்கப்படுள்ளது.
அத்தோடு இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளமையும் இன்னொரு விசேட அம்சம்.
எது எப்படியோ, நமக்கு இன்னொரு ஹீரோ கிடைத்துவிட்டார்!