Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
16
மீண்டெழும் இயக்குனர் சிகரம் - உயிர் கொடுக்கும் சிஷ்யர்கள்.

k.balachander in hospital - மீண்டெழும் இயக்குனர் சிகரம் - உயிர் கொடுக்கும் சிஷ்யர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,311 Views
மீண்டெழும் இயக்குனர் சிகரம் - உயிர் கொடுக்கும் சிஷ்யர்கள்.

தமிழ்த் திரையுலகின் இரு பெரும் நட்சத்திரங்களான "சூப்பர்ஸ்டார்" ரஜினியையும், "உலகநாயகன்" கமல்ஹாசனையும் சினிமாவுக்கு தந்த பெருமைக்குரியவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். இவர்களை மட்டுமல்லாது இன்னும்பல திரைநட்சத்திரங்களை தமிழ்த் திரைவானில் மின்னவைத்த பெருமைமிக்க இயக்குனர் என்றால் மிகையில்லை.

தமிழ்சினிமாவில் கே.பாலசந்தரைப் பொறுத்த வரையில், சாதாரண/மத்தியதர நகர்ப்புற மக்களின் இயல்பு வாழ்க்கையை உள்ளது உள்ளபடி அப்படியே திரையில் காட்சியாக்கி மக்களின் இதயங்களில் 'இயக்குனர் சிகரம்' ஆக என்றும் நீங்காத சிறப்புப் பெற்றவர். இன்று உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் காலனோடு போராடிக்கொண்டிருக்கிறார்.

 திரைத்துறைக்குள் 1960-ம் ஆண்டளவில் MGR இன் "தெய்வத்தாய்" திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக உள்நுழைந்த கே.பாலசந்தர் தயாரிப்பாளர், இயக்குனர், மேடைநாடக இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்கள் கொண்ட அபூர்வ திறமையாளர்.

 எந்தவொரு நிலையற்றதன்மைக்கும் ஒப்புவமை கூறும் நீர்க்குமிழியில் நிலைத்து நின்றவர் இவர். அதாவது  தன் தயாரிப்பிலும், இயக்கத்திலும் உருவான முதற்படமான "நீர்க்குமிழி" யில் ஆரம்பித்த இவரின் சாதனைப்பயணம் இயக்கத்தில் "பொய்" யிலும், தயாரிப்பில் 'குருவுக்காய் குறை கேட்கத் துணிந்த சிஷ்யனின் நடிப்பில்' "குசேலன்" இலும் நிறைவுபெற்றது.

திரைப்பயணம் நிறைவு கண்டாலும் அவர்தம் உலகியல் வாழ்க்கைப்பயணம் நிலைத்திட வேண்டும் என்பது திரைத்துறை கடந்து, அனைவரதும் பொதுவானதொரு ஆசை. இருந்தும் சில மாதங்களுக்கு முன்னர் மகன் கைலாசம் இறைபதம் எய்தியமை பாலசந்தரின் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்துள்ளது.   
                                                                                                            
அத்தோடு இதயத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக பை-பாஸ் அறுவைச்சிகிச்சை செய்து கொண்ட பாலசந்தருக்கு, சில தினங்களுக்கு முன் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

             

 இந்தநிலையில், பாலசந்தரின் நிலை கேட்டதும் புகழின் உச்சத்திலும் ஊடக வெளிச்சத்திலும் குளித்துக் கொண்டிருக்கும் தமிழ்சினிமாவின் சிறப்பு நட்சத்திரங்கள், தாம் இவ்வாறு புகழின் உச்சத்தில் இருக்கக் காரணமான தங்கள் குருநாதரைத்தேடி சென்னை ஆழ்வார்ப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு ஓட்டமாக ஓடிச்சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினியோ இதற்கு ஒருபடி மேலேபோய், தன் குருநாதருக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களிடம் பாலசந்தரின் நிலைமை பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டதோடு, மேலதிக சிகிச்சைகளுக்கான தேவைகளையும் கவனிப்புகளையும் சிறப்பாக மேற்கொள்ளுமாறும் கேட்டிருக்கின்றார். அத்துடன் பாலச்சந்தர் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்குச் சென்று அவருக்கு ஆறுதலும் தைரியமும் சொல்லி அளவளாவி, தன் குருநாதர் நோயிலிருந்து மீண்டுவர நம்பிக்கை கூறி வந்திருக்கிறார்.                                                                                                                                                            

பாலச்சந்தர்  முதலில்  கண்டெடுத்த  நட்சத்திர முத்தான  சகலகலாவல்லவன்,உலகநாயகன் என்று புகழப்படுகின்ற கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதனால் தன் குருநாதரை அருகிலிருந்து கவனிக்க முடியவில்லையே என வருத்தம் தெரிவித்திருப்பதும் இங்கே முக்கியமாக குறிப்பிட்டுக் கூறவேண்டிய விஷயமாகவுள்ளது.      

"மீண்டு எழுந்து வாருங்கள் அய்யா" - Kamal Haasan - தன் குருநாதர் நலம்பெறவேண்டி கமல் எழுதிய கடிதம்

                                                                                                                                       
இப்போது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் கண்டிருக்கும் இயக்குனர் சிகரத்தை, நடிகை குஷ்பு, இயக்குனர் வசந்த் உள்ளிட்ட பல திரையுலகப் பிரமுகர்கள் சென்று பார்த்து அவரின் சுக நலன்கள் பற்றி விசாரித்து தைரியமூட்டி வருகின்றார்கள்.
                                                    
 வைத்தியர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்துவரும் இயக்குனர் சிகரம் மீண்டெழுந்து வர வேண்டும். அவரின் வழிகாட்டலும், ஆசியும் தமிழ்சினிமாவின் புதிய படைப்பாளர்களுக்கும் கிடைக்கவேண்டும். இந்தச் சாதனை மனிதர் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற திரையுலகினரின் பிரார்த்தனையில் நாங்களும் சங்கமிப்போம்.

*கணேசமூர்த்தி ராகவன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top