இந்தமுறை பல நடிகர் நடிகைகளுக்கு அதிஸ்டம் கரங்கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல சொல்லவேண்டும். முன்னணியில் உள்ள நடிகைகளின் பாடங்கள் அமோகமாக ஓடி வெற்றிகளையும் விருதுகளையும் பெற்றுக் கொடுக்காவிட்டாலும், அவர்களுக்கு நல்ல பெயர்களையும் வேறு நிறைய வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுத்துள்ளமையை நாமும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
சரி !
வர இருக்கும் இந்த விசேஷ புதுவருடத்தை, நம்ம நடிகைகள் என்னென்னன விதத்தில் கொண்டாட
திட்டமிட்டுள்ளார்கள் என்பது பலருக்கு தெரியாது. இப்போ அவங்க என்னென்ன பண்ண திட்டமிட்டிருக்காங்கன்னு சொல்றோம். கவனமா குறிப்பெடுத்துக் கொள்ளுங்க.
ஹன்சிஹா ஒவ்வொரு முறையும் அமெரிக்காவின் லாஸ் வேகாஷுக்கு சென்று நண்பர்களோடு கொண்டாடுவார். இந்தமுறையும் தமிழ் படப்பிடிப்பு ஒன்றுக்காக இத்தாலி செல்லவுள்ள ஹன்ஷிகா, அந்த படப்பிடிப்பு முடிய சரியான தருணத்தில் அமெரிக்கா பறக்கிறார் தன் தோழிகளோடு..
அமலாபால் புதுமணத் தம்பதியான அமலா மற்றும் விஜய் தம்பதியினர் இந்தமுறை அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்க்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக அமலாபால் சொல்கிறார். அங்கிருந்து கனடா செல்வது இவர்களின் அடுத்த திட்டம்.
த்ரிஷாதன்னுடைய சென்னை வீட்டில், பெற்றவர்கள் உற்றவர்களோடு தனது புதுவருடத்தை வரவேற்க தயாராகவுள்ளேன் என்கிறார்.
இந்த நடிகைகளோடு....
துபாய் அமேரிக்கா போன்ற நாடுகளின் நட்சத்திர விருந்தகங்களில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்கள் ராய் லட்சுமியும், நடிகை ஸ்ரேயாவும் !
சென்னை மற்றும் பிற மாநிலங்களில் சமந்தா & பூனம் பஜ்வா & காஜல் அகர்வால் போன்றோர் தங்களின் தொழிலையும் கவனித்து (நடன விருந்து ) புத்தாண்டையும் கலக்கலாய் கலந்து கட்ட உத்தேசித்துள்ளார்கள்.
ஜமாயுங்க ஜமாய்ங்க