Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
23
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயற்கை எய்தினார். சாய்ந்தது சாதனைச் சிகரம் !

k.baalachandar-death - இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயற்கை எய்தினார். சாய்ந்தது சாதனைச் சிகரம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

247 Views
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயற்கை எய்தினார்.
சாய்ந்தது சாதனைச் சிகரம் !

தமிழ் திரை உலகின் தரமான படைப்புக்களுக்கு சொந்தக்காரன் ,தரணியில் தனக்கென்று ஓர் தனித்துவ திரையுலக பாதை வகுத்த திரையுலக மாமேதை இயக்குனர் சிகரம் பாலசந்தர் இன்று மாலை இயற்கை எய்தினார்.

சரித்திர சாதனைகளால் இன்றும் தமிழ் திரை உலகில் தன்னிகரில்லா சாதனை விருட்சங்களை விதைத்த இந்த இமையம் இன்று மாலை இயற்கைக்கு இரையானது.

 சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் சிகிச்சை பலனின்றி தனது  84 வயதில் காலமாகிய செய்தி தமிழ் திரை உலகை கவலைகொள்ள செய்திருக்கிறது.

பிரபல இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு கடந்த நாட்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது.



இந்நிலையில் இன்று இரவு 7 மணியளில் சிகிச்சை பலனின்றி கே.பாலசந்தர் காலமானார்.

சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியவர். பிரச்சினைகளை பின்னூட்டலாய் பிதற்றாமல் பிரமாதமாய் திரையில் காட்டியவர்.

இயக்குனர் , தயாரிப்பாளர், திரைக்கதை, வசனகர்த்தா என பன்முகத்திறமை கொண்ட பாலசந்தர் பல்விருதுகளுக்குச் சொந்தகாரர்.

1930 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் பிறந்தவர் பாலசந்தர். பள்ளிப் பருவத்தில் நாடகங்களை நடத்தி வந்தவர் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கினார்.

நாடகத்துறை மீது இவர் கொண்ட கொண்ட நாட்டம் இவர் திரையுலகில் கால்பதிக்க வாய்ப்புக்களை தேடிக்கொடுத்து  .

1965 ம் ஆண்டு MGR அழைப்பை ஏற்று தெய்வத்தாய் படத்துக்கு கதை வசனம் எழுதினார். பின்னர் நீர்க்குமிழி படத்தை இயக்கி இயக்குனராக  அவதாரமெடுத்தார்.எத்தனையோ தமிழ் திரையுலக பிரபலங்களின் திரையுலக வாசல் கதவை திறந்து வழிகாட்டிய இயக்குனர் சிகரம் தன் வாழ்வில் MGR ஐ வைத்து படம் இயக்கியதே இல்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது.

செவாலியர் சிவாஜி கணேசன் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியுற்றது.

வெற்றி+தோல்வி ஆகிய இரு துருவங்களையும் ஒரேநேரத்தில் தமது திரையுலக வாழ்வில் பாலச்சந்தர் அனுபவித்தது உண்டு. நான்கு சுவர்கள் படுதோல்வி அடைந்து விமர்சன அளவிலும் ஒதுக்கப்பட்ட அதேகால கட்டத்தில் அவரது நூற்றுக்கு நூறு வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்தது.

சோதனைகள் வந்தால் அடுத்த படத்தில் சாதனை படைக்கும் மாயாஜால மந்திரம் தெரிந்தவர் இந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள்.

காலத்தால் அழியாத காத்திரமான கலைப்படுப்புக்கள் என்றால் எங்கள் கண்முன்னே வந்துபோகும் உன்னத படைப்பாளி இந்த இயக்குனர் சிகரம் அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், அவள் ஒரு தொடர் கதை, வறுமையின் நிறம் சிவப்பு, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி உட்பட 100 படங்களுக்கு மேல் இயக்கி சிகரம் தொட்டவர்.

                                                  

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரை 1975 இல் 'அபூர்வ ராகங்கள்'எனும் வெற்றித் திரைக்காவியம் மூலமாக ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியவர என்ற மிகப்பெரும் பெருமை இவருக்கே இருக்கிறது.தன் திரையுலக வாழ்வில் ரஜினிக்கு அறிமுகம் கொடுத்ததுவே எனக்கிருக்கும் மிகப்பெரும் கௌரவம் என்று சொல்லிகொள்பவர்.

     

உயர்ந்த இடத்தில் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திகழ்ந்தாலும்,இருந்தாலும் இன்றும் ரஜினியின் மரியாதைக்கு பாத்திரமாக பாலசந்தர் அவர்கள் திகழ்ந்தமை கவனிக்கத்தக்கதே !

தமிழ் திரையுலகின் சாதனை நாயகர்களான கமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலச்சந்தரின் 'நினைத்தாலே இனிக்கும்'. ஆயினும் இது எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு பெற்றுக் கொடுக்கவில்லை. பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும்.

1979 ல் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "நினைத்தாலே இனிக்கும்' திரைப்படம். 35 ஆண்டுகளுக்குப் பின் இருவரையும் வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதற்கு பாலச்சந்தர் திட்டமிட்டிருந்தார். அது நடக்கவில்லை என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.

நடிகர் கமலஹாசன் புகழ்பெறுவதற்கும் காரணமாக இருந்தவரும் பாலசந்தர்தான். அத்துடன் SV  சேகர், மெளலி, மகேந்திரன், பிரகாஷ்ராஜ், ராதாரவி, சுஜாதா, ஷோபா, சரத்பாபு, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பல் தமிழ் திரையுலக் நட்சத்திரங்களுக்கு தன் படங்கள் மூலமாக பிள்ளையார் சுழி போட்டவர்.

மேலும் ரெட்டைச் சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் கமலஹாசனின் உத்தம வில்லன். அடுத்த ஆண்டு  இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது.  

கே.பாலசந்தர் அவர்கள் இதுவரை மொத்தமாக 101 படங்கள் இயக்கியுள்ளார்.
முதல்படம்: நீர்க்குமிழி;
நூறாவது படம்: பார்த்தாலே பரவசம்;
அவர் இயக்கிய கடைசிப் படம்: பொய்.

எஸ். வி.சேகர் (வறுமையின் நிறம் சிகப்பு),
மவுலி (நிழல் நிஜமாகிறது)
மகேந்திரன் (நவக்கிரகம்)  
காத்தாடி ராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என்று
 நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை சினிமாவுக்கு அழைத்து உன்னத இடம் கொடுத்து உட்கார வைத்து அழகு பார்த்தவரும் இவர்தான்.

இப்படியான திறமைசாலி தன் நடிப்பாற்றலை கல்கி, பொய், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தம வில்லன் போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையையும்  வெளிப்படுத்தியிருக்கிறார்.

                                           

#விருதுகள்:

1968 - 1993 - தமிழக அரசு விருது
1973ல் - கலைமாமணி விருது
1974 - 1994 - 12 முறை பிலிம்பேர் விருது (சவுத்)
1976 - 1982 - நந்தி விருது
1981ல் - பிலிம்பேர் விருது
1987ல் - மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
1992ல் - அறிஞர் அண்ணா விருது
2008 - 39வது சர்வதேச திரைப்படவிழாவில் "வாழ்நாள் சாதனையாளர் விருது'
2011ல் - தாதா சாகிப் பால்கே விருது.
கவுரவ டாக்டர் பட்டங்கள் - 3 பல்கலை

#பாலச்சந்தர் இயக்கிய தமிழ் திரைப்படங்கள்:
01.நீர்க்குமிழி
02.நாணல்
03.மேஜர் சந்திரகாந்த்
04.பாமா விஜயம்
05.அனுபவி ராஜா அனுபவி
06.எதிர் நீச்சல்
07. தாமரை நெஞ்சம்
08.பலே கொடலு
09. பூவா தலையா
10.சட்டெகலப்பு சடேயா
11.இரு கோடுகள்
12. பத்தாம்பசலி
13.எதிரொலி
14.நவகிரகம்
15.காவிய தலைவி
16. நான்கு சுவர்கள்
17.நூற்றுக்கு நூறு
18.பொம்மா பொருசு
19.புன்னகை
20.கண்ணா நலமா
21. டெள்ளக டகழா
22.அரங்கேற்றம்
23.சொல்லத்தான் நினைக்கிறேன்
24. அவள் ஒரு தொடர்கதை
25. நான் அவனில்லை
26. அபூர்வ ராகங்கள்
27.மன்மதநீலை
28.அந்துலாணி கதா
29. மூன்று முடிச்சு
30.அவர்கள்
31. பட்டின பரவசம்
32. அயினா
33. நிழல்நிஜமாகிறது
34.மாரோ சரிதரா
35. தப்பு தாளங்கள்
36. தப்பிடா தலா
37. நினைத்தாலே இனிக்கும்
38.அந்தமானிய அனுபவம்
39. நூல் வெலி
40. குப்பெடு மனசு
41.இடி கதா காடு
42.கழகன்
43.வறுமையின் நிறம் சிவப்பு
44. அகாலி ராஜ்யம்
45. அடவாலு மீகு ஜோகர்லு
46.எங்க ஊர் கண்ணகி
47. தொலிகோடி கூடிண்டி
48. தில்லு முல்லு
49. தண்ணீர் தண்ணீர்
50. எத் துஜே கே லியே
51.47 நாட்கள்
52. 47 ரோஜூலு
53.அக்னி சாட்சி
54. பெங்கியாழி அரலிடா ஹூவு
55. பொய்காலி குதிரி
56.ஜாரா சி ஜிங்காடி
57. கோகிலம்மா
58. எக் நாய் பகலி
59.அச்சமில்லை அச்சமில்லை
60. ஈரஐ ரேகேகலு
61. கல்யாண அகதிகள்
62.சிந்து பைரவி
63. முகிலே மலிகே
64. சுந்தர ஸ்வாப்நகலு
65. புன்னகை மன்னன்
66. மனதில் உறுதி வேண்டும்
67. ருத்ரவேணா
68. உன்னால் முடியும் தம்பி
69.புது புது அர்த்தங்கள்
70.ஒரு வீடு இரு வாசல்
71.அழகன்
72. அழகன்
73. வானமே இல்லை
74. திலோன் கா ரிஷ்தா
75. ஜாதி மல்லி
76. டூயட்
77.கல்கி
78. பார்த்தாலே பரவசம்
79. பொய்

சாதனைகள் படைத்து தமிழ் திரையுலகை சர்வதேச தரத்துக்கு உயர்த்திய உத்தமர் இன்று நிரந்தரமாய் துயில் கொள்கிறார்.
தலைமுறைகள் தாண்டியும் வாழும் தமிழ் திரையுலகின் அடையாளமான பாலு மகேந்திரா,ராம நாராயணன்,எஸ்எஸ் ராஜேந்திரன் வரிசையில் இப்போது இயக்குனர் சிகரமும் 2014 ல் தமிழ் திரை வானிலிருந்து உதிர்ந்த ஓர் நட்சத்திரமாகிறது.

காலத்தால் அழியாத காவியங்கள் மூலமாய் நம் கண் முன்னே இவர் படைப்புக்கள் நினைவுகளை மீட்டித்தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


*தில்லையம்பலம் தரணீதரன்.







Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top