சேட் கொலரை தூக்கிவிடும் தல - தளபதி ரசிகர்கள்.('தல'டா, 'தளபதி'’டா) தமிழ்சினிமாவில் மட்டுமன்றி பல்வேறு நாடு மொழி கடந்த உலக சினிமாக்களிலும்கூட கதாநாயகர்களின் கையே மேலோங்கியிருப்பது தொன்றுதொட்டு நிலவும் மாற்றமுடியாத நிலையாகவுள்ளது. பொதுவாக முன்னணியில் உள்ள கதாநாயகர்களுடன் முரண்பட்டுக்கொள்வதை இயக்குனர், தயாரிப்பாளர் உட்பட பலரும் முடிந்தவரை தவிர்த்துக் கொள்வார்கள்.இவர்களின் நிலையே இப்படியிருக்கும்போது நடிகைகள் நிலைபற்றி சொல்லியாகவேண்டுமா என்ன......?
கதாநாயகர்களுக்கே அதிகமுக்கியத்துவம் உள்ளநிலையில், கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள் மனந்திறந்து அவர்களைப் பற்றிக் கருத்துச் சொல்ல வாயே திறப்பதில்லை. முடிந்தவரை அவர்களைப் புகழ்ந்து தள்ளுவதையே வாடிக்கையாகக் கொள்வார்கள். இல்லையென்றால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் போய்விடுமே என்ற பயம்தான் இதற்குக் காரணம்.
பொதுவாக நடிகைகளின்நிலை இப்படியிருக்க, இந்தித் திரையுலகின் முன்னணி நாயகியான "கத்ரினா கைப்" பொலிவூட்டின் மாஸ் ஹீரோக்களைப் பற்றி தன் உள்மனம் திறந்திருக்கிறார்.
சமீபத்தில் மும்பையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நாயகி "கத்ரினா கைப்" மிகமோசமான கருத்துக்களை கூறியுள்ளார். இந்தித் திரையுலகில் உங்களோடு சேர்ந்து நடிப்பதற்கு யார் பொருத்தமான நாயகன்..?என்றும் யாரோடு சேர்ந்து நடிப்பதை சந்தோசமாக உணர்கின்றீர்கள்..? என கேள்வி ஒன்று கேட்டபோது மிகவும் கோபப்பட்ட கத்ரினா, இந்தி நாயகர்களைப் பற்றி ஒரு பிடி பிடித்திருக்கிறார்.
இந்தி நாயகர்கள் மிகவும் மோசமான இயல்பு கொண்டவர்கள் எனவும், இரவு பூராகவும் மோசமாகக் குடிப்பதோடு காலையில் எழுந்து அப்படியே படப்பிடிப்புத்தளத்துக்கு வந்து விடுகின்றார்கள், படப்பிடிப்புக்கு வரும்போது குளிப்பது இல்லை. உடல்சுத்தம் சுகாதாரம் பேணுவதில்லை, வாசனைத்திரவியங்களையும் பாவிப்பதில்லை என குறை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இந்த நடிகர்களுடன் சேர்ந்து காதல்காட்சிகளில் நெருக்கமாக நடிக்கும்போது ரொம்பவே சிரமமாகவுள்ளது. நாற்றம் அடிக்கிறது, வாந்தி வருகின்றது. இப்படியான ஹீரோக்களுடன் நடிக்கும்போது எவ்வளவு துன்பத்துக்கு உள்ளாகின்றேன் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என தனது உள்ளக்குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார் கத்ரினா கைப்.

கோபத்தைக் கொட்டித்தீர்த்ததோடு நிற்கவில்லை அந்த அம்மணி. பழக்கவழக்கங்களையும், ஒழுக்கத்தையும் தென்னிந்திய நடிகர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறாராம்.
"இவர்களோடு பார்க்கும்போது தென்னிந்திய நடிகர்கள் எவ்வளவு நல்லவர்கள். படப்பிடிப்புக்கு வரும்போது அவ்வளவு சுத்தமாக வருகின்றார்கள். சக நடிகைகளிடம் எவ்வளவு மரியாதையாக நடந்து கொள்கின்றார்கள். மற்ற நடிகர்,நடிகைகளை மதிக்கத் தெரிந்த கண்ணியமான, கனிவுள்ளம் கொண்டவர்கள் அவர்கள்.அவர்களிடம் இருந்து பொலிவூட் நடிகர்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது" என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறாராம்.
இதனால் தமிழ் மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் "தல" டா, "தளபதி" டா என தங்கள் சேட் கொலர்களை தூக்கிவிட வைத்திருக்கிறார் இந்த பொலிவூட்டின் துணிச்சலான அழகுப்பதுமை.
இந்தப்பக்கம் தூண்டில் போடுகின்றாரா....?
இல்லை,உண்மையிலேயே தூக்கி உயரத்தில் வைக்கிறாரா...?
காலம் பதில் சொல்லும், காத்திருப்போம்.
*கணேசமூர்த்தி ராகவன்.