இளைய தளபதி விஜய்யும் நடிகர் ஜீவாவும் நண்பன் படத்தில் நண்பர்களாக இணைந்த தருணம் தொடக்கம் இன்று வரை நல்ல நண்பர்கள்.
இந்த நட்புக்கு இலகனமாக ஜீவாவின் தந்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்த ஜில்லாவில் நட்புக்காக ஹீரோவானார் விஜய்.
இந்த நன்றிக்கடனுக்கு பிரதியுபகாரமாக, விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிவரும்
''டூரிங் டாக்கிஸ்'' படத்தில், இசைஞானி இளையராஜாவின் இசையில் இரண்டு பாடல்களை பாடிக் கொடுத்துள்ளார் ஜீவா.
புதுமுகங்கள் நடித்துவரும் இந்தப் படத்திலே, ஜீவா பாடிய இந்தப் பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதாகவும், இவை படத்தின் வெற்றிக்கு பெரும் பலமாகவும் அமையுமென சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பல கலைஞர்கள் பயணிக்கும் வரிசையில் நடிகராகவும் பாடகராகவும் தானும் அடியெடுத்து வைத்துள்ள ஜீவா.
இசைஞானியின் இசையில் பாடியது புதுமையான மனது மறக்காத அனுபவம் என்கிறார்.
வாழ்த்துக்கள் இன்னும் பாட ஜீவா ....