Horawapothana murder - ஹொரவப்பொத்தானை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் மகள் கொலை (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
12,009 Views
அநுராதபுரம் - ஹொரவப்பொத்தானை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் மகளை அவரது மருமகன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு கலேன்பிதுனுவெவ பிரதேசத்தில் உள்ள குறித்த பொறுப்பதிகாரியின் வீட்டில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக கலேன்பிதுனுவெவ காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் குறித்த பொறுப்பதிகாரியின் மனைவியையும் அதே ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும், அவர் தற்போது ஆபத்தான நிலையில் அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.