இயக்குனர் விஜய் + அமலா பால் மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
அதுவும் திகதியும் நிச்சயிக்கப்பட்டுள்ளது, எதிர்வரும் ஜூன் 12. தெய்வத்திருமகள் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இயக்குனர் எனும் இடம் இருக்கிறது. அந்தத் திரைப்படத்திலேயே அனுஷ்காவோடு இன்னொரு நாயகியாக அமலாபாலையும் நடிக்க வைத்து இருவருக்குமான நட்பை நெருக்கப்படுத்தியுள்ளார் விஜய் என்று கூறப்படுகிறது.
இதுவரை அமலாவும் விஜயும் தமது காதலை வெளிப்படையாக மறுத்து வந்திருந்தாலும், விஜய் (இயக்குனருங்கோ) தன்னுடைய அடுத்த படமான தலைவா படத்திலும் அமலாவை நடிக்க வைத்தபோது கோடம்பாக்கத்துக் காரர்கள் உறுதி செய்தார்கள் இவர்களது காதலை !
இவற்றோடு., கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சைவம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அமலா பாலை ரொம்ப புகழ்ந்து மிகைப்படுத்து கிலாகித்திருக்கிறார் விஜய்.
இப்போ மொத்தத்தில் பார்க்கின்றபோது, எதிர்வரும் ஜீன் 12 ஈ இந்த காதல் ஜோடி கல்யாண பந்தத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியே வந்து விட்டது! பார்க்கலாம் திரையில் தோன்றிய இந்தக் காதலும் எப்படி அரங்கேறப்போகிறது என்று...!!