மீண்டும் வருகின்றார்!
K.R.Vijaya in cinema again - மீண்டும் வருகின்றார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
தமிழ் பட உலகில் 1960 மற்றும் 70-களில், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட கதாநாயகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கே.ஆர்.விஜயா.
தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கப்பட்டார். கே.ஆர்.விஜயாவுக்கு தற்போது 68 வயது ஆகிறது.
கடந்த 15 வருடங்களாக கே.ஆர்.விஜயா சினிமாவில் தீவிரமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
ரஜினிகாந்தின் சந்திரமுகி, கமல்ஹாசனின் தசாவதாரம் உள்ளிட்ட சில படங்களில் மட்டும் ஓரிரு காட்சிகளில் குணசித்ர வேடங்களில் தலைகாட்டினார்.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.ஆர்.விஜயா ‘மாயமோகினி’ என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.
இந்த படத்தில் அவர் பெண் சித்தராக வருகிறார். அவர் நடித்த காட்சிகள் வந்தவாசி அருகே படமாக்கப்பட்டு உள்ளன.
தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்து இருப்பதாக கே.ஆர்.விஜயா தெரிவித்துள்ளார்.