Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
09
பிரியாணியை தடை செய்யக் கோரும் பிரபல நடிகர்

Kamal Hassan speaks for Jalikattu - பிரியாணியை தடை செய்யக் கோரும் பிரபல நடிகர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,608 Views
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பிரியாணிக்கும் தடை விதிக்கவேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
 

ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா டுடே கருத்தரங்கம் இன்று தொடங்கியது. இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டியை மறுபடியும் தொடங்கவேண்டும் என்றார். ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகப்பெரிய ரசிகன் நான் ஆவேன் என ஆதரவு தெரிவித்து உள்ள கமல் இப்போட்டியை வெறுப்பவர்கள் பிரியாணியையும் வெறுக்கவேண்டும் என்று கூறிஉள்ளார். 
 
“ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கவிரும்பினால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள்,” என்று இந்தியா டுடே செய்தியாளரிடம் கமல்ஹாசன் கூறிஉள்ளார். 

ஜல்லிக்கட்டு விளையாடிய சில நடிகர்களில் நானும் ஒருவன். தமிழன் என்று பெருமை கொள்கிறேன், இது எங்களுடைய கலாசாரம் என்று கமல்ஹாசன் கூறிஉள்ளார். 
 
முன்னதாகவும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தனது முழு ஆதரவை தெரிவித்து இருந்த கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளுடன் தொடர்புபடுத்தி குழம்பக்கூடாது என்று கூறியிருந்தார். ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளில் அவைகள் காயப்படுத்தப்படுகிறது, அவை உயிரிழக்கவும் நேரிடுகிறது, ஆனால் தமிழகத்தில் காளைகள் தெய்வமாக கருதப்படுகிறது, குடும்பத்தில் ஒருவராக காளைகள் வளர்க்கப்படுகிறது என்று கூறினார். 
 
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் பணியவைக்கப்படுகிறதே தவிர அவை காயப்படுத்தப்படுவது கிடையாது. காளைகள் கொம்புகள் உடைப்பு, பிற இடங்களில் காயம் ஏற்படுத்துவது போன்ற எந்தஒரு காயமும் ஏற்படுத்தப்படுவது கிடையாது என்று தெளிவுப்படுத்தினார் கமல்ஹாசன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top