பாடசாலைகளிலேயே மாணவர்கள் இனரீதியாக பிரிக்கப்பட்டுள்ளமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் சிரமத்தை அதிகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
உயர் கல்வியின் ஊடாக தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு என்ற வேலைத்திட்டம் குறித்து கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இளைஞர்களே நல்லிணக்க செயற்பாடுகளில் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.
ஆனால் பாடசாலைகள் இன ரீதியாக தனித்து இயங்குவதால் அவர்கள் பிரிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
எவ்வாறாயினும் பல்கலைக்கழக உயர்கல்வியின் போது இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்படுகின்றனர்.
இதன் ஊடாக நல்லிணக்கத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.