Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
11
டுவிட்டரில் வந்த பவுண்ஸர்கள் , நிதானமாக பார்த்து விளையாடிய மஹிந்த: எம்.ஆரின் #AskMR

Mahinda in Twitter - டுவிட்டரில் வந்த பவுண்ஸர்கள் , நிதானமாக பார்த்து விளையாடிய மஹிந்த: எம்.ஆரின் #AskMRSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,984 Views
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று டுவிட்டர் ஊடாக அதன் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.

இதன்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. எனினும் தேர்ந்தெடுத்த சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருந்தார்.

இதன்போது அதிகமான கேள்விகள் இலங்கை- சீன உறவு மற்றும் , ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்த விவகாரம் தொடர்பில் எழுப்பட்டிருந்தன.

மேலும் பொதுபலசேனா, மஹிந்தவின் அரசியல் பயணம், நல்லாட்சி என்பன தொடர்பிலும் வினவப்பட்டிருந்தது.

இதில் பலவற்றுக்கு அவர் பதிலளித்திருந்தார்.

இதுதவிர ரவிராஜ் கொலை தீர்ப்பு , அவரது காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், குடும்ப அரசியல் குற்றச்சாட்டு, வில்பத்து விவகாரம் தொடர்பிலும் கேள்விகள் கேட்கப்பட்டன.

எனினும் பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

பொதுபலசேனா தொடர்பில் கேட்ட கேள்விக்கு , அதன் பின்னால் யார் இருக்கின்றார் என்பது உங்களுக்கு இப்போது தெரியுமென அவர் குறிப்பிட்டார்.

தாம் கடும்போக்கினை ஒருபோதும் அனுமதிக்கவில்லையெனவும், எதிர்காலத்திலும் அவ்வாறே எனவும் தெரிவித்திருந்தார் மஹிந்த ராஜபக்ஷ.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எழுப்ப ப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் “அனைத்து சமூகங்களின் நலன்களும் பேணப்படுகின்ற அரசியல் தீர்வு தொடர்பில் நான், தொடர்ந்தும் உறுதியாக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தொடர்பிலும் அவர் பதிலளித்திருந்தார்.

ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை சாடியிருந்த அவர் டிரம்பின் ஆட்சியை ஆவலுடன் எதிர்ப்பார்பதாக தெரிவித்திருந்தார்.

சீனா இலங்கையின் நண்பன் எனத் தெரிவித்திருந்த அவர் தான் இலங்கையின் நிலங்களை வெளிநாடுகளுக்கு விற்கவில்லை என சுட்டிக்காட்டியிருந்தார்.

சில மணித்தியாலங்கள் நீடித்த மேற்படி கேள்வி – பதில் கலந்துரையாடலின் போது அவர் மூன்று மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

இதன்போது அவர் மூன்று மொழிகளிலும் பதிலளித்திருந்தார்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top