Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
24
உலகத்தின் முன் வென்று காட்டியவரை ! மரணம் வென்றது !

lee kuan yew - உலகத்தின் முன் வென்று காட்டியவரை ! மரணம் வென்றது !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

59 Views
பதினான்காம் நூற்றாண்டில் ஒரு முக்கியத் துறைமுகமாக மாறிய சிங்கப்பூர், இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிடம் பிடிபடுகிறது. மிகப்பெரிய தாக்குதலையும் பாதிப்பையும் அடைந்த சிங்கப்பூர் போரின் முடிவில், தன்னாட்சி பெற்ற அரசாக மாறுகிறது. குடிக்க தண்ணீர்கூட இல்லாத ஒரு தீவாகா, நாடாக இருக்கும் சிங்கப்பூர் தாமாக விரும்பி 1963ஆம் ஆண்டு தன்னை மலேசியாவுடன் இணைத்துக் கொள்கிறது.

1965ல் மலேசியா சிங்கப்பூரை தன்னிடமிருந்து விடுவிக்கிறது, பிரித்துவிடுகிறது அல்லது சுதந்திரம் கொடுக்கிறது. உலகவரலாற்றில் தாம் விரும்பாமல், கேட்காமல் சுதந்திரம் என்ற பெயரில் கழட்டிவிடப்பட்ட ஒரு தேசம் சிங்கப்பூராகத்தான் இருக்க வேண்டும்.

1965ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி மலேசியாவின் தந்தை என அழைக்கப்படும் அப்போதை பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் சிங்கப்பூர் பிரித்துவிடப்பட்டதை அறிவிப்பதையும், பிரித்துவிடப்பட்டது குறித்து தன் உணர்வுகளை அழுகையோடு சிங்கப்பூரின் தந்தை ”லீ க்வான் யூ” வெளிப்படுத்தினார்.

1965ல் பிரித்துவிடப்பட்ட சிங்கப்பூர் தனது பொன்விழாவைக் கொண்டாடுகிறது. SG50 என்ற முழக்கம் நாடெங்கும் ஒளிர்கிறது. ஒவ்வொரு மக்களின் பிரார்த்தனையும் ”லீ க்வான் யூ” குறைந்தபட்சம் வருகின்ற செப்டம்பர் 9 வரையேனும் நலமாய் இருக்க வேண்டுமென்பதாகவே இருந்தது. ஆனாலும் மரணம் சற்று முன்கூட்டியே வென்றிருக்கிறது.


பால்ய காலம் முழுதும் மலேசியாவுடனானது என வலியோடு பகிரும் ”லீ க்வான் யூ”, மலேசியா இல்லாமல் ”சிங்கப்பூர் வாழமுடியாது” என்றும் பிரகடனப்படுத்துகிறார். உழைப்பும், தீர்க்கமும், காலமும், அவருடைய பிரகடனத்தையே அவருடைய மற்றொரு பிரகடனம் கொண்டு முறித்துப் போடுகிறது.

அவரின் நம்பிக்கை அவராலேயே தோற்கடிக்கப்படுகிறது. ஆமாம், பிறிதொரு சமயத்தில், எந்த வாயால் சிங்கப்பூரால் வாழமுடியாது என்று சொன்னாரோ அதே வாயால் திடமாய், உரத்த குரலில் அவரே பிரகடனப்படுத்துகிறார் ”மற்றவர்களின் விளையாட்டை ஆடுவதற்காக நான் இங்கில்லை. நான் பல லட்சம் மக்களின் வாழ்வைக் கொண்டிருக்கிறேன்.” ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு அழுத்தமாய் அறிவிக்கிறார் ”சிங்கப்பூர் வாழ்ந்து காட்டும்”. சிங்கப்பூர் வாழ மட்டும் செய்யவில்லை… உலகத்தின் முன் வென்று காட்டியிருக்கிறது.


லீ க்வான் யூயின் வாழ்க்கை :

லீ க்வான் யூ, செப் 16ம்தேதி 1923 இல் சிங்கப்பூரில் வசதியான சீனக்குடும்பத்தில் பிறந்தார் . இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் ,1950 இல், கேம்ப்ரிட்ஜ் பிட்ஸ்வில்லியம் கல்லூரியில் சட்டம்பயின்றார் . 1954 இல் மக்கள் செயல் கட்சியின் செக்ரட்டரி ஜெனரல் ஆனார் .


1955 இல் சிங்கப்பூரின் புதிய அரசியல் சட்டம் அமுலாக்காரணமாக இருந்தார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை , நியமன உறுப்பினரையும் சேர்த்து 32 ஆகஉயர இவரே காரணம் .மலேசியாவிலிருந்து திடீரென பிரிந்தபோது , கண்ணீரோடு ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு , தனது தொலைநோக்குச் சிந்தனையால் நவீனசிங்கப்பூரை உருவாக்கினார் .1959 முதல்தொடர்ந்து 1990 வரை , உலகின் நீண்டகாலப்பிரதமர் என்ற வரலாற்றைப்பெற்றார் .

12 நவம்பர் 1954 இல் மக்கள் செயல் கட்சி தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை அக்கட்சியே, அங்குஆட்சி புரிந்துவருகிறது .1992 வரை அக்கட்சியின் செக்ரட்டரி ஜெனரலாக இருந்தார் .5,ஜூன் 1959 இல். முதல்பிரதமர்ஆனார். 1963இல் மலேசிய பெடரெசனில் இணையபாடுபட்டார்.

1965 ஆகஸ்ட் 7 இல் மலேசியாவிலிருந்து பிரிய ஒப்பந்தம் ஏற்படக் காரணமாக இருந்தார். அதன் பிறகு சுயாட்சி பெற்ற சுதந்திரக்குடியரசு எனப் பிரகடனப்படுத்தினார். வெளிநாட்டு மூலதனத்தைப் பெருக்க முற்பட்டார். 1968, 1972, 1976, 1980 ஆகிய தேர்தலில் இவரது மக்கள் செயல்கட்சி மகத்தான வெற்றி பெற்றது. இன்று வரை இக்கட்சியே ஆட்சியில் உள்ளது. இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் லீசி யான் லூங் தான்இன்றைய பிரதமர்.


சுத்தத்தை போற்றியவர்:

சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லீ க்வான் யூ, சுத்தத்தை அதிகம் விரும்பியவர். அவர் பிரதமராக பதவிவகித்த காலங்களில், ஆயிரக்கணக்கான தொண்டு ஊழியர்களுடன் தானும் இணைந்து, சிங்கப்பூர் நகரத்தின் தெருக்கைகூட்டிசுத்தம் செய்தார். இதற்குபின்னரே, சிங்கப்பூர் மக்கள் சுத்தம் குறித்த அவசியத்தை உணரத்துவங்கினர். இன்று, சிங்கப்பூர் நகரம் தூய்மையாக இருப்பதன்பின்னணி இது தான்.


அனைவருக்கும் வீடு: 

சிங்கப்பூரில் வசிக்கும் அனைவருக்கும் வீடு என்பதை தனது லட்சியமாக கொண்டிருந்தார் லீ க்வான்யூ. அந்தகாலத்தில், சிங்கப்பூர் எதிர்நோக்கியிருந்த முக்கிய, சிக்கலானபிரச்னைகளில் ஒன்று குடியிருப்புக்கள். ஓட்டுக்குடித்தனங்களில் தான் மக்கள் வாழ்ந்தனர்.

பிரிட்டிஷ் குழு ஒன்று அளித்தஅறிக்கையில், உலகின் மிக மோசமான சேரிகளைகொண்ட இடம்சிங்கப்பூர் என்று குறிப்பிடப்பட்டது. மேலும், இது நாகரீக சமுதாயத்திற்கு ஒருஅவமானம் என்றும் அறிக்கைசுட்டிக்காட்டியது.

வெகுண்டு எழுந்த லீ, தான் பிரதமர் ஆனவுடன், கடந்த 1960ம் ஆண்டில், வீடமைப்பு வளர்ச்சிகழகத்தை துவக்கி, ஐந்தே ஆண்டுகளுக்குள் 54 ஆயிரம்குடியிருப்புக்களை உருவாக்கினார். இதனால், இன்று சிங்கப்பூரில் வசிக்கும் 82 சதவீத மக்கள் சொந்த அல்லது வீடமைப்பு வளர்ச்சிகழகவீடுகளில் வசிக்கின்றனர். லீயின் இந்தசாதனை இன்றுவரை உலகளவில்போற்றப்படுகிறது.

பாதுகாப்புக்கு அடித்தளமிட்டவர்:

குட்டி நாடாக இருந்தாலும், பலமிக்க இராணுவத்தை கொண்டதாக உள்ளது சிங்கப்பூர். இதற்கு லீயின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே காரணம் ஆகும். கடந்த 1963ம் ஆண்டு, சிங்கப்பூரை இந்தோனேஷியா படைதாக்கியது. அந்ததாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் சிங்கப்பூர் தவித்தது. இந்ததாக்குதலுக்குபின்னர், பலமான இராணுவத்தை உருவாக்க நினைத்தார் லீ.

உடனடியாக கட்டாய இராணுவசேவை திட்டத்தை அமல்படுத்தினார். 1967ம் ஆண்டு சிங்கப்பூரில் கட்டாயராணுவசேவை அறிமுகமானது. இதனால், சிங்கப்பூர் இராணுவம் பலம் கொண்டதாகமாறியது



லீயின் மறைவுக்கு உலகத் தலைவர்களின் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி:

சிங்கப்பூர் தந்தையும் முன்னாள் பிரதமருமான லீ க்வான் யூமரணமடைந்த துமிகவும் வேதனை அளிக்கிறது. தருணம். தொலை நோக்குப்பார்வையுடன் தலைவர்கள் மத்தியில் சிங்கமாகத்திகழ்ந்தவர். லீயின் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை அளிப்பதாக இருக்கிறது.


அமெரிக்க அதிபர் ஒபாமா: 

லீயை இழந்துநிற்கும் சிங்கப்பூர் மக்களின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். வரலாற்றில் ஒரு மாமனிதர் லீ. மக்கள் நலனுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். உலகநாடுகளில் சிங்கப்பூரின் இன்றைய சிறப்புக்குகாரணமானவர்.


ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன்: 

ஆசிய அரசியல் வரலாற்றில் உயரிய இடம் வகிப்பவர் லீ. சிங்கப்பூரை உருவாக்கி 50 ஆண்டுகளாகும் இந்தநேரத்தில் அவர் பிரிந்தது வருத்தம்அளிக்கிறது.

இவ்வாறு தலைவர்கள் லீக்கு புகழாரம் சூட்டிஉள்ளனர்.



சிங்கப்பூர் சிற்பியின் முதன்மையான முத்துக்கள்

சிங்கப்பூர் என்ற தேசத்தை செதுக்கிய சிற்பியான 'லீ க்வான் யூ' பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். வாழ்ந்து கெட்ட குடும்பத்தை லீயின் அம்மாதான் தூக்கி நிறுத்தினார்.

சிறு வயதில் லீ க்வான் யூவுக்கு இங்கிலாந்து மீது ஈர்ப்பு அதிகம். முதல் உலகப் போரில் ஜப்பான், இங்கிலாந்தை பந்தாடியபோது அந்த ஈர்ப்பு அவருக்கு போய்விட்டது. அதுவே பின்னாளில் அவரது இங்கிலாந்து எதிர்ப்புக் கொள்கையாக மாறியது.

உலகில் அதிக ஆண்டு காலம் ஜனநாயக அரசு ஒன்றின் பிரதமராக இருந்தவர் லீ. டோயின்பீயின் சிந்தனைகளால் கவரப்பட்டவர். 'கற்பனைத்திறன் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை செதுக்குவார்கள்' என்ற அவரது கருத்தில் நம்பிக்கை கொண்டவர்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை காந்திக்கு எவ்வளவு வருத்தத்தைக் கொடுத்ததோ லீக்கு அந்த அளவு வருத்தம் கொடுத்தது மலேசியா - சிங்கப்பூர் பிரிவினை. இயற்கை வளங்கள் இல்லாத சிங்கப்பூரை மலேசியர்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அந்த கோபமே லீயின் வைராக்கியமாக மாறி சிங்கப்பூரை வளர்ச்சி பெறச் செய்தது.

அடியாத மாடு படியாது' என்பதில் நம்பிக்கை கொண்டவர் லீ. ''பள்ளியில் படிக்கும்போது நான் தவறு செய்தால் ஆசிரியர்கள் பிரம்பால் விளாசுவார்கள். அதுவே என்னை ஒழுக்கமாக மாற்றியது. அதனால்தான் தவறு செய்வோருக்கு பிரம்படி கொடுக்கும் தண்டனை அமல்படுத்தினேன்'' என்பார்.

விளையாட்டு பொழுதுபோக்கு பிரியர் லீ. கோல்ப் நடனம் நீச்சல் அவருக்கு பிடித்தமானவை. சிகரெட் பீர் பழக்கம் இருப்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டவர். ஒரு கட்டத்தில் தொப்பை போடுவதால் பீரை நிறுத்தினார். புகைப்பதால் மக்கள் ஓட்டுப்போட யோசிக்கிறார்கள் என்று உளவுத்துறை சொன்னபோது அதையும் நிறுத்தினார்.

லீயை பொறுத்தவரை புனைவு நூல்கள் குப்பை. அவரே பல நூல்கள் எழுதியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் டாம் கிளான்சி.

இன்றைய அரசியல்வாதிகள் லீயிடம் கற்கவேண்டியதில் முக்கியமானது மதச்சார்பின்மை. 'அரசியல்இ பொருளாதாரம் பற்றி ஏதேனும் சொல்ல வேண்டுமானால் உங்கள் மத அங்கிகளை கழற்றிவிட்டு வாருங்கள்'' என்பார் லீ.

அவரது ஆட்சியில் கேள்விகள் கேட்ட எதிர்க்கட்சியினர் பத்திரிக்கையாளர்கள் மனித உரிமையாளர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். ஊழல்இ வறுமை உள்நாட்டு குழப்பம் என்று சிக்கலாக இருந்த சூழலில் நாட்டை முன்னேற்ற தனக்கு வேறு வழி இல்லை என்றார் லீ.

தன்னைப் பற்றிய சர்ச்சைகளை பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார். படித்தவர்கள்இ படித்தவர்களையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற அவரது கொள்கை மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது. மனித அறிவு வளர்ச்சிக்கும் மரபணுக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருதிய லீ அவ்வாறு அறிவித்தார்.


உலகத்தலைவர்களில் ஒப்பற்ற தலைவராக நிமிர்ந்து நிற்கும் சிங்ப்பூரின் பிதா மகனை இழந்து தவிக்கும் மக்களின் துயர்களில் எங்களின் கைகளும் நீழ்கின்ற அதேவேளை ஆழ்ந்த அஞ்சலிகளை நாங்களும் பகிர்ந்து கொள்கின்றோம்.


======CASTRO RAHUL======

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top