Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
17
கலவரத்தை ஏற்படுத்தியதாக ஷாருக்கான் மீது வழக்கு!!

saharukkahn case - கலவரத்தை ஏற்படுத்தியதாக ஷாருக்கான் மீது வழக்கு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,875 Views
ரயில் நிலையத்தில் சேதம் ஏற்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மீது ரயில்வே பொலிஸார் வழக்கு பதிந்துள்ளனர்.



நடிகர் ஷாருக்கான் நடித்த ‘ரயீஸ்’ என்ற படம் தற்போது வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது.

இந்த படத்தை பிரபலப்படுத்துவதற்காக ஷாருக்கான் கடந்த மாதம் 24-ந் திகதி மும்பையில் இருந்து டெல்லிக்கு ரயிலில் சென்றார்.

முக்கிய ரயில் நிலையங்களில் அவர் தனது படத்தை மேம்படுத்தினார். ரயிலில்  இருந்தவாறு ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.

ஷாருக்கானை பார்ப்பதற்காக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் அவரது ரசிகர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் கோடா ரயில் நிலையத்தில் ரயில் சிறிது நேரம் நின்றபோது ஷாருக்கானை பார்க்க அவரது ரசிகர்கள்  திரண்டதால் நெரிசல் உருவானது.

நெரிசலின் போது ரயில் நிலையத்தில் இருந்த கடைகள் சேதமானது. பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.

அங்கு கடை வைத்து நடத்தி வரும் விக்ரம்சிங் பெரிதும் பாதிக்கப்பட்டார். அவரது கடை முழுமையாக சேதமானது. பணமும்  திருட்டுபோனது. இது தொடர்பாக அவர் கோடா ரயில்வே பொலிஸில் புகார் கொடுத்தார்.

பொலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி ஷாருக்கான் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர்.

பொது சொத்துக்களை  சேதப்படுத்துதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குபதிவாகி இருக்கிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top