Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
20
அரசியல் சாணக்கியம் அறிந்தவரா கமல்....??? - ஏற்குமா தமிழகம்....???

kamals political entry - அரசியல் சாணக்கியம் அறிந்தவரா கமல்....??? - ஏற்குமா தமிழகம்....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,908 Views
தமிழ்த்திரையுலகின் ஆதிக்கம் இல்லாது தமிழ்நாட்டு அரசியல் இல்லை என்றே சொல்லலாம். 

அந்த அளவிற்கு தமிழ்த் திரையுலகின் செல்வாக்கு தமிழக அரசியலில் தாக்கம் பெற்றுவிட்டது என்பதே உண்மை. இந்தநிலையில், திரையில் ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெற்ற நடிகர்கள் எல்லோருக்குமே மனதின் எங்கோ ஓர் மூலையில் அரசியல் ஆசை துளிர்விடாமலும் இல்லை. அவ்வாறு தோன்றிய ஆசையை வெளிப்படையாய் சொல்லி களம் கண்டு சாதித்தவர் சிலர், தோற்றவர் பலர், காலம் கனியுமென்று காத்திருப்போர் மீதம் பேர்.அண்மைக்காலமாக தமிழக அரசியலில் அடிக்கடி மாறும் காட்சிகளும், எப்போது எது வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்ற தோற்றப்பாடுகளும் உள்ள நிலையில், அரசியல்வாதிகளின் கருத்துக்களைத் தாண்டி முழங்கத் தொடங்கியிருக்கின்றன தமிழ்த் திரையுலக நடிகர்களின் குரல்கள். ரஜினி, கமல், விஜய், ராகவா லோரன்ஸ் என நீளும் பட்டியலில் ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியேற்பு வரைக்கும் தமது பங்களிப்பையும், கருத்துக்களையும் தெரிவித்து தமது எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கான முயற்சிக்கு ரசிகர்களின் ஆதரவு எத்தகையது என்று நாடிபிடித்துப்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் நடிகர்கள். இதில் கமல்.......???

நான் அரசியலில் இல்லை. எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. ஊழலுக்கு எதிரான என் கசப்புணர்வை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். ஆரம்பத்தில் நான், குற்றப் பின்னணி கொண்ட கும்பல் என்று சொன்னபோது, அது அரசியல் சார்பில்லாத ஒருவனின் கோபமாக கருதப்பட்டது. இப்போது வந்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு அதை உறுதிப்படுத்தி
இருக்கிறது. சசிகலா மட்டுமின்றி, ஜெயலலிதாவும் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

சட்டப்பேரவையை சுத்தம் செய்ய வேண்டும். மாறாக, பரிசோதிக்கக் கூடாது. எனவே, மறுதேர்தல் நடத்த வேண்டும். இப்போது மக்கள் தங்கள் கருத்தை தெளிவாக வெளிப்படுத்த முடியவில்லை. காரணம், தற்சமயம் கவுன்சிலர்கள் மூலமும், எம்எல்ஏக்கள் மூலமும் பேச வேண்டியிருக்கிறது. மறுதேர்தல் வைத்தால், தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக மக்கள் உணர்த்துவார்கள். மறுதேர்தல் என்பது மக்களுக்குச் செலவு வைக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், என்ன செய்வது?
தரையில் பாலைக் கொட்டிவிட்டோம். அதைச் சுத்தம் செய்ய வேண்டும். எனவே, மறுதேர்தல் வைத்து, மீண்டும் பால் கறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனக்கு அரசியலுக்கு வர பயமாக இருக்கிறது. காரணம், நாம் வேறுவிதமான சிந்தனை கொண்ட மக்கள். இந்தியாவுக்கு இப்போதுள்ள அரசியல் தேவையில்லை. நான் மிகவும் கோபக்காரன். இந்தியாவுக்கு என்னைப் போன்ற கோபக்கார அரசியல்வாதிகள் வேண்டாம். சமநிலை கொண்ட மனிதர்கள்தான் அரசியலுக்கு தேவை. நான் எப்படி கோபமாக இருக்கிறேனோ, அதுபோலவே மக்களும் இருக்கிறார்கள். நல்ல அரசியல்வாதிகளை தேடிப் பாருங்கள். அத்தகைய மனிதர்களை எல்லா நேரமும் சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ காண முடியாது. சில நேரம் வீதியில் கூட அத்தகைய மனிதர்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். மெரினாவில் நடந்ததைப் போல் இன்னொரு திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறை நிகழ்ந்தால், நிச்சயம் மக்கள் கொந்தளிப்பார்கள். அப்படியொரு நிலை ஏற்படும்வரை நாம் காத்திருக்க வேண்டாம். இவ்வாறு பேட்டியொன்றில் கூறியுள்ள கமல், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் தொடக்கம் இன்றுவரை அரசியல் கலப்பற்ற மக்கள் போராட்டங்கள் அனைத்திற்கும் ஆதரவு தெரிவித்து, மக்களை விழிப்புணர்வுப்படுத்தி, சரியான பாதையில் வழிநடத்தி வருகின்றார். இந்தநிலையில், கமல் அரசியலுக்கு வர விரும்புகின்றாரா...? அவ்வாறு வந்தால் மக்கள் வரவேற்பார்களா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழ ஆரம்பித்திருக்கின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top