தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் பல்கேரியாவில் தொடங்கவிருக்கின்றது.
இந்நிலையில், இப் படத்தின் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தையையும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளதால் பட்ஜெட் எகிறியுள்ளதோடு படமும் படு ரிச்சாக வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையின் தொகை ரூ.50 கோடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ரிலீஸ் உரிமையை பெற போட்டி அதிகமாகும் பட்சத்தில் இன்னும் தொகை அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தை அடுத்து இந்த ஆண்டு அதிக தொகைக்கு வியாபாரம் ஆகும் படம் 'விவேகம்' படமாகத்தான் இருக்கும் என்றும் கோலிவுட்டில் பரபரப்பாக செய்திகள் பரவி வருகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.