Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
19
துமிந்த சில்வாவுக்கு பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் உகந்ததல்ல! மருத்துவ அறிக்கை ; படங்கள்

Duminda Silva Article - துமிந்த சில்வாவுக்கு பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் உகந்ததல்ல! மருத்துவ அறிக்கை ; படங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,351 Views
மருத்துவ அறிக்கையின்படி பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய சூழல் அவருக்கு உகந்ததல்ல.

உயிராபத்து எந்த நேரத்தில் ஏற்படும் என கூற முடியாது.

வாழ்க்கையை மறுபக்கம் புரட்டிப்போட்ட சம்பவத்தை அடுத்து சமூகத்தில் அவப் பெயரை பெற்றுக்கொண்டார் ஆர்.துமிந்த சில்வா.

சகல மருத்துவ அறிக்கைகளின் படி இந்த இளம் அரசியல்வாதி மூளையில் பாரிய பாதிப்புக்கு உள்ளானார்.

எனினும், இன்னும் பூரணமாக குணமடையவில்லை.

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரத்த-துமிந்த ஆகியோருக்கு இடையேயான மோதல் குறித்து இலங்கையர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டது.

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில், கடந்த வருடம் அவருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.

இன்று அவர் பாரிய நோயுடன் சிறைச்சாலை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமது இளைய புதல்வரின் உடல்நிலை குறித்தும் குடும்ப மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து ஞாயிறு 'திவயின' செய்தித்தாளுக்கு, அவரின் தந்தையான லால் சில்வா கருத்து தெரிவித்தார்.

கேள்வி: துமிந்த சில்வாவின் தற்போதைய உடல்நிலை குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. உண்மையில் அவர் அபாயகரமான நிலையிலா உள்ளார்?

பதில்: துமிந்த 20 நாட்கள் வரை ஏனைய சிறைக்கைதிகளுடன் இருந்த வேளையில், வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிறைச்சாலை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் அவரது உடல் நிலை தொடர்ந்தும் மோசமடைந்தது. 

துமிந்த சில்வாவிற்கு தலை சத்திர சிகிச்சை மேற்கொண்ட சிங்கப்பூரின் விசேட மருத்துவ நிபுணர், துமிந்த சில்வா இலங்கைக்கு வந்தபோது மருத்துவ அறிக்கை எமக்கு வழங்கப்பட்டது. 

அந்த அறிக்கையில் பக்டீரியா தொற்றுடனான சூழல் பொருத்தமற்றது என குறிப்பிட்டிருந்தார். 

அவரது உண்மையான ஆரோக்கிய நிலை உடலில் வெளிப்படையாக தெரியாவிட்டாலும், விரைவாக சுகாதார தன்மை மீண்டும் வீழ்ச்சியடைந்து மறுபக்கம் செல்லலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மருத்துவர்களின் கூற்றின்படி தெய்வாதீனமாகவே அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. 

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட 'கிரானியோபிளாஸ்ரி' என்ற சந்திர சிகிச்சையின் மூலம், 30 சதுர சென்ரி மீட்டர் வெற்றிடத்திற்கு உடலின் பிறிதொரு பகுதியில் இருந்து பெறப்பட்ட செல்கள் பொருத்தப்பட்டன. 

அதன் பின்னர் சிங்கப்பூரில் மேலும் இரண்டு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன் பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தற்போது உள்ள நோய் நிலமை பரவாமல் இருப்பதற்காக இடைக்கிடையே சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

அவருக்கு முளையில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்களின் படி நீதவான் ஜீ.ஏ.ஆர். ஆட்டிகலவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடந்த 3 ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் பிரதி பணிப்பாளர் அனில் ஜயசிங்கவின் அனுமதியுடன் நீதிமன்றத்திற்கு 9 பேர் அடங்கிய மருத்துவ குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. 

அந்த அறிக்கையில் துமிந்த சில்வாவின் அபாய நிலை குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

இந்த மருத்துவ அறிக்கை சிங்கப்பூர் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருததுடன் ஒத்திருந்தமை அதன்போது தெரியவந்தது. 

பொய்யான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக சேறுபூசியவர்களுக்கு தற்போதாவது, உண்மை நிலையை விளங்கிக்கொள்ள அவர்களது அறிவு விருத்தியடைவதற்காக நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


      
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top