Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Apr
21
புரட்சித் தமிழனின் மன்னிப்பு கர்நாடகர்களை இன்னும் கொதிப்படையச் செய்யுமா ..!!

baakupali 2 - புரட்சித் தமிழனின் மன்னிப்பு கர்நாடகர்களை இன்னும் கொதிப்படையச் செய்யுமா ..!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14,415 Views
காவிரி விவகாரத்தில் கன்னடர் களை தாக்கி பேசிய நடிகர் சத்யராஜை கண்டித்து வருகிற 28-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக‌ கன்னட அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதனால் இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாகுபலி 2' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், சத்யராஜ், ராணா, நாசர் நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன்,ரோஹினி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பாகுபலி 2' திரைப்படம் வருகிற 28-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆந்திரா, தமிழகம் என‌ நாடு முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் கன்னட அமைப்பினர், ‘கடந்த 2008-ம் ஆண்டு நடந்த‌ காவிரி நதி நீர் போராட்டத்தின்போது, நடிகர் சத்யராஜ் கர்நாடக அரசையும், கன்னட மக்களையும் மிகவும் இழிவாக பேசினார். கன்னட அமைப்புகளின் தலைவர்களை நாயுடன் ஒப்பிட்டு பேசினார். காவிரி ஆறு தமிழர்களுக்கு சொந்தமானது' என ஆவேசமாக பேசினார். எனவே அவர் நடிப்பில் வெளியாக உள்ள ‘பாகுபலி 2’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விட மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கன்னட சலுவளி கட்சியின் தலைவரும் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான‌ வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘தமிழ் நடிகர் சத்யராஜ் கன்ன டர்களை அவமானப்படுத்தி விட்டார். கர்நாடக முதல்வரையும் கன்னட அமைப்புகளின் தலை வர்களையும் தரக்குறைவாக பேசியுள்ளார். கன்னடர்களுக்கு சொந்தமான காவிரி ஆற்றை தமிழகத்துக்கு விட்டுக்கொடுக்க முடியாது. கன்னடர்களின் தன் மானத்துக்கு சத்யராஜ் சவால் விட்டுள்ளார். எனவே அவர் நடித்த பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க முடியாது.

சத்யராஜை கண்டித்து கன்னட அமைப்புகளின் சார்பாக வ‌ருகிற 28-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். பெங் களூரு டவுன் ஹாலில் எனது தலைமையில் பேரணி நடத்த இருக்கிறோம். எங்களது போராட்டம் பாகுபலி 2 திரைப்படத்தை கண்டித்து அல்ல. சத்யராஜை கண்டித்துதான் போராட்டம் நடத்துகிறோம். எனவே தயாரிப்பாளாரும், இயக்குநரும் சத்யராஜிடம் பேசி, தீர்வு காண வேண்டும்.

கன்னடர்களை அவமானப் படுத்திய சத்யராஜ் பெங்களூரு வந்து பகிரங்கமாக‌ மன்னிப்பு கேட்க வேண்டும். இனி கன்னடர்களை கண்டித்து பேச மாட்டேன் என உறுதி அளிக்க வேண்டும். இல்லையென்றால் பாகுபலி 2 திரைப்படம் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம்.கன்னடர்களை அவமதித்த சத்ய ராஜுக்கு தக்க பாடத்தை புகட்டு வோம். இதை மீறி பாகுபலி 2 திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்கத்தின் உடைமைக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்'' என்றார்.

போராட்டத்துக்கு ஆதரவு
கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சா.ரா.கோவிந்து, ‘‘கன்னடர்களை அவமதித்த சத்யராஜின் திரைப்படத்தை கர்நாடகாவில் எதற்காக திரையிட வேண்டும்? அவர் மன்னிப்பு கேட்கும்வரை கர்நாடகாவில் பாகுபலி 2 திரைப்படத்தை திரையிட கூடாது. சத்யராஜின் பிடிவாதம் தேவையற்றது. இந்த விவகாரம் தொடர்பாக இயக்கு நர் ராஜமவுலி என்னிடம் பேசினார். நான் சத்யராஜிடம் பேசி, மன்னிப்பு கேட்க ஏற்பாடு செய்யு மாறு கோரினேன். இந்த விஷயத் தில் கன்னட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரைய ரங்க உரிமையாளர்களும் கன்னட அமைப்பினருக்கு ஆதர வாக இருக்க வேண்டும்''என்றார்.

நடிகர் சத்யராஜை கண்டித்து கன்னட அமைப்புகளின் போராட்டத்துக்கு கன்னட ரக்ஷன வேதிகே, நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. இதனால் பாகுபலி 2 திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கன்னட அமைப்புகளின் எதிர்ப்பை தொடர்ந்து விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் இது தொடர்பாக சத்யராஜ் பேசிய போது

"9 ஆண்டுகளுக்கு முன்பு பேசியது யாரையும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். அத்துடன் என்னால் பாகுபலி - 2 திரைப்படத்திற்கு பிரச்சனை ஏற்படக்கூடாது" என்றும் அவர் தெரிவித்தார் .எது எவ்வாறாக இருந்த போதிலும் நான் தமிழன் என்பதில் பெருமையடைகிறேன் . இனி வருகின்ற காலத்தில் காவிரி உட்பட  தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார் .


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top